சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த மாதம் உயரப்போகும் டிவி விலை.. எவ்வளவு தெரியுமா? இறுதி முடிவு நிர்மலா சீதாராமன் கையில்!

Google Oneindia Tamil News

சென்னை: அரசின் ஓராண்டு வரிச்சலுகை இந்த மாதம் முடிய உள்ளதால் அடுத்த மாதம் முதல் (அக்டோபர்) டிவி விலை உயர வாய்ப்பு உள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

டிவி உற்பத்தி செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் பேனல்களை இறக்குமதி செய்து வருகின்றன, டிவி தயாரிக்க பேனல் மிக முக்கியமான மூலப்பொருள் ஆகும். இதை உள்நாட்டில் பெரிய அளவில் தயாரிப்பதற்கு சாத்தியங்கள் தற்போது வரை இல்லை. ஏனெனில் செலவு அதிகம் என்பதால் தயாரிக்கப்படவில்லை.

இதனால் தான் மத்திய அரசு டிவி பேனல்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட வரி 5 சதவீதத்தை கடந்த ஆண்டு ரத்து செய்தது. ஓராண்டுக்கு ரத்து அமலில் இருககும் என்று கூறியிருந்தது. இதனால் டிவி தயாரிப்பு செலவுகள் 10 சதவீதம் மட்டும விலையை முன்பு ஏற்றின. ஆனால் அரசு அறிவித்த சலுகை இந்த மாதத்துடன் முடிகிறது. இதனால் விலை கடுமையாக உயருமா என்ற அச்சம் நிலவுகிறது.

இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கை தீபங்களை காப்போம் - முக ஸ்டாலின் இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கை தீபங்களை காப்போம் - முக ஸ்டாலின்

இறுதி முடிவு நிதியமைச்சம் கையில்

இறுதி முடிவு நிதியமைச்சம் கையில்

இந்த சலுகை மீண்டும் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை. டிவி பேனல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சாம்சங், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு தனது தொழிற்சாலையை மாற்ற விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் சலுகையை நீட்டிக்க மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விரும்புகிறது, இறுதி முடிவை நிதியமைச்சமே எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

ஏற்கனவே உற்பத்தி செலவு உயர்ந்து உள்ளதால் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இந்த சூழலில் ஒருவேளை வரி விதிக்கப்பட்டால் உற்பத்தி செலவு கூடும். இதனால் டிவி விலையும் அதிகரிக்கும் என்று டிவி தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

4 சதவீதம் அதிகரிக்கும்

4 சதவீதம் அதிகரிக்கும்

இது குறித்து டிவி தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: முழுமையாக வடிவமைக்கப்பட்ட டிவி பேனல்கள் விலை ஏற்கனவே 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து விட்டது. உதாரணமாக 32 இன்ச் டிவிக்கான பேனல் 34 டாலரில் இருந்து 60 டாலராக உயர்ந்து விட்டது. இதனால் உற்பத்தி செலவு மிகுதியாகிவிட்டது. மத்திய அரசு வரிச்சலுகையை மேலும் நீட்டிக்காத பட்சத்தில் சர்வதேச சந்தையில் வர்த்தக போட்டியை இந்தியாவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். டிவி விலையை குறைந்த பட்சம் 20 முதல் 25 சதவீதம் உயர்த்த வேண்டியது வரும்.

ரூ. 600 முதல் 1200 வரை

ரூ. 600 முதல் 1200 வரை

வரி விதிக்கப்பட்டால் 32 இன்ச் டிவி விலை ரூ. 600, 42 இன்ச் டிவி விலை ரூ. 1200 முதல் 1600 ரூபாய் வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. இதைவிட பெரிய டிவிக்கள் விலை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில் விலை உயர்ந்தால் விற்பனை பாதிக்கும். எனவே அரசு டிவி உற்பத்தியை இறக்குமதியை கட்டுப்படுத்த வரி விதிப்பதற்கு பதில், உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கலாம். 3வது ஆண்டில் இருந்து வரியை விதிக்கலாம் என்று டிவி நிறுவனங்கள் தெரிவித்தன.

English summary
Television sets could become costlier right at the onset of the festive season in October. According to industry sources, the price increase could range between 20-35 percent and will primarily because of a spike in prices of panels that are a key component of the television set.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X