சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Lock down: வெளியே போகாம வீட்டிலேயே இருக்கீங்களா?.. அனுபவத்தை ஷேர் பண்ணுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவைரஸ் விழிப்புணர்வு உண்மையிலேயே மக்களுக்கு ரொம்ப நல்லாவே இருக்கு.. கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்கள் வீட்டுக்குள்ளேயேதான் இருக்காங்க. கொஞ்சம் பேர்தான் வெளியில் ரவுண்டு அடிக்கிறார்கள்.

வெளியில் சுற்றுபவர்களும் கூட ஏதாவது காரணத்துக்காக வருபவர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவர்களும் கூட வெளியில் வராமல் தவிர்க்கப் பார்த்தால் ரொம்ப நல்லது.

tell us about your stay at home experience

நாம் அனைவரும் வீடுகளிலேயே தனித்து இருந்து கட்டுப்பாடு காப்பது மட்டுமே இந்த வைரஸை ஒழிக்க சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனமும் கூறியுள்ளது. அத்தோடு கை சுத்தம் உள்ளிட்டவை மிக மிக அவசியம். இதையும் மறந்து விடாமல் கட்டுப்பாடு காத்து வைரஸை அழிக்க ஒத்துழைக்க வேண்டும்.

வீட்டிலேயே இருப்பது போரடிக்குதுன்னு சொல்லாதீங்க.. வீட்டோடு இருக்க எவ்வளவு பெரிய வாய்ப்பு. .அப்பா அம்மா, மனைவி, குடும்பம், குழந்தைகள், தாத்தா, பாட்டி மொத்தமாக இருக்கும் வாய்ப்பு நிறைய பேருக்குக் கிடைப்பதில்லை. இந்த கொரோனாவைரஸ் புண்ணியத்தால் அது கிடைத்துள்ளது. அந்த வகையில் குடும்பத்தோடு நேரம் செலவிட அருமையான வாய்ப்பு இது. பயன்படுத்திக்கங்க.. கூடவே உங்களையும், உங்களது குடும்பத்தையும், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தையும் பாதுகாக்க கிடைத்த வாய்ப்பும் கூட இது.

வீட்டில் எப்படி நேரத்தை செலவிடறீங்க.. என்ன மாதிரி பொழுது போகுது.. உங்க அனுபவத்தை சுவைபட எழுதி அனுப்புங்க.. செல்பி எடுத்து போட்டோவா அனுப்புங்க.. முடிஞ்சா குட்டி வீடியோ கூட ஓகேதான்.

இந்த முகவரிக்கு அனுப்பி வைங்க.. உங்களது அனுபவத்தை மற்ற வாசகர்களிடமும் நாங்க ஷேர் பண்றோம்: [email protected]

English summary
Dear readers please tell us about your stay at home experience during this 21 day Lock down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X