சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 11 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.

தமிழகத்தில் கோடைகாலத்தின் உச்சகட்டமான அக்னி வெயில் எனப்படும் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை நகரில் ஆம்பன் புயல் புண்ணியத்தால் நேற்று இரவு முதல் காலை வரை மழை கொட்டியது. இன்று காலையில் பலத்த காற்று வீசியது.

Temperature crosses 100 Degrees Fahrenheit in 11 cities in TN

ஆனால் இந்த வானிலை சட்டென மாறியது. சென்னை நகரில் இன்று பகலில் வெயில் கொளுத்தியது. தமிழகத்திலேயே சென்னை நகரில்தான் அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது.

நேற்று மழை.. இன்று தகிக்கும் சென்னை.. இந்தாண்டு கத்திரியில் முதல் முறையாக வெப்பநிலை 107F!நேற்று மழை.. இன்று தகிக்கும் சென்னை.. இந்தாண்டு கத்திரியில் முதல் முறையாக வெப்பநிலை 107F!

சென்னை உட்பட மொத்தம் 11 நகரங்களி இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி எடுத்தது. புதுவையிலும் கூட 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

தமிழக நகரங்களில் வெயில் (ஃபாரன்ஹீட்):

  • சென்னை- 107 டிகிரி
  • கடலூர் - 104 டிகிரி
  • மதுரை- 105 டிகிரி
  • திருத்தணி- 106 டிகிரி
  • வேலூர்- 106 டிகிரி
  • பரங்கிப்பேட்டை- 103 டிகிரி
  • நாகப்பட்டினம்- 102 டிகிரி
  • ஈரோடு- 103 டிகிரி
  • சேலம்- 100 டிகிரி
  • திருச்சி- 101 டிகிரி
  • தூத்துக்குடி- 102 டிகிரி

English summary
The temperature crossed 100 Degrees Fahrenheit in 11 cities in Tamil Nadu including Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X