சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம்: 12 இடங்களில் சதமடித்த வெயில்.. 3 நாட்களுக்கு அனல்காற்று நீடிக்கும்.. வானிலை மையம் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலும் மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. ஆனால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் அனல் காற்றும் குறைந்தபாடில்லை.

Temperature hits century in 12 places of Tamilnadu

இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 107, மதுரை, திருச்சியில் தலா 106, திருநெல்வேலி, கரூர் -பரமத்தி, சேலத்தில் தலா 104 மற்றும் நாகபட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதனிடையே வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும்... மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை பதில் கலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும்... மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அப்போது மணிக்கு 50 கி.மீ., முதல் 60 கி.மீ., வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாத இடங்களில் அடுத்த 3 நாளுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில், சூளகிரி 6 செ.மீ., கொடநாட்டில் 4 செ.மீ., நத்தத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
temperature hits century in 12 places of Tamilnadu. Heat wave will be there in next 3 days said Chennai Meteorological center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X