சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொந்த பள்ளியில் அட்மிஷனுக்கே லஞ்சமா?.. ரூ 6 லட்சத்தை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்

Google Oneindia Tamil News

சென்னை: பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சத்தை மோசடி செய்ததாக அப்பள்ளி நிர்வாகி பாஜகவை சேர்ந்த மதுவந்தி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Madhuvanthi மீது புகார் | PSBB School-ல் Seat தர பணம் வாங்கினார் -கிருஷ்ணபிரசாத் | * TamilNadu

    சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் அதே பகுதியில் கோவிந்தன் சாலையில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.

    இன்று கிருஷ்ணபிரசாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து மோசடி புகார் தொடர்பாக செய்தியாளர்களையும் கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துகுமார் சந்தித்துள்ளார்.

    ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு.. பல கோடி கடன் பாக்கி.. ஆக்சன் எடுத்த தனியார் வங்கி.. நடந்தது என்ன? ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு.. பல கோடி கடன் பாக்கி.. ஆக்சன் எடுத்த தனியார் வங்கி.. நடந்தது என்ன?

    பாஜக நிர்வாகி மதுவந்தி

    பாஜக நிர்வாகி மதுவந்தி

    அவர் கூறுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணபிரசாத் நிர்வகித்து வரும் கோயிலுக்கு நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகளும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி வருகிறார். அப்போது கிருஷ்ணபிரசாத்திடம் தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். பள்ளியில் சேர்க்க விரும்புவோர் தலா 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருகிறேன் என மதுவந்தி தெரிவித்துள்ளார்.

    8 பேரிடம் பணம்

    8 பேரிடம் பணம்

    இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலுக்கு வரும் 8 நபர்கள் சீட்டு கேட்டு கிருஷ்ணபிரசாத்திடம் கொடுத்த 19 லட்சத்தை மதுவந்தியிடம் அவரது இல்லத்தில் வைத்து கொடுத்துள்ளார். பணம் கொடுத்தும் நீண்ட மாதங்களாகியும் சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் காவ்ல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    ரூ 13 லட்சத்தை திருப்பி கொடுத்த மதுவந்தி

    ரூ 13 லட்சத்தை திருப்பி கொடுத்த மதுவந்தி

    அப்போது அச்சமடைந்த மதுவந்தி ரூ 13 லட்சத்தை பெற்றோர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ 6 லட்சத்தை தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கிருஷ்ணபிரசாத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பணம் குறித்து மதுவந்தியிடம் கிருஷ்ணபிரசாத் கேட்டுள்ளார்.

    அடியாட்கள் மூலம் தாக்குதல்

    அடியாட்கள் மூலம் தாக்குதல்

    அதற்கு கிருஷ்ணபிரசாத்தை மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். தாக்கியது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரசாத் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஆதாரங்களை சமர்பித்து மதுவந்தியிடம் பணத்தை மீட்டு கொடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    மதுவந்தி

    மதுவந்தி

    இதுகுறித்து மதுவந்தி கூறுகையில் பிஎஸ்பிபி பள்ளி எங்களுடையது. நான் ஏன் பணம் வாங்க வேண்டும். கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் பொய். பணத்தை அவர் ஏமாற்றிவிட்டு என் மீது கிருஷ்ணபிரசாத் பழி போடுகிறார். உரிய ஆதாரங்களுடன் கிருஷ்ணபிரசாத் மீது புகார் அளிப்பேன் என மதுவந்தி விளக்கமளித்துள்ளார்.

    ஏலத்திற்கு வந்த வீடு

    ஏலத்திற்கு வந்த வீடு

    பிஎஸ்பிபி பள்ளியில் மாணவிகள் முன்பு ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் அரை நிர்வாணமாக வந்தது, பாலியல் தொல்லைகள் கொடுத்தது தொடர்பாக புகார் எழுந்த போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில் பல கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்ததால் மதுவந்திக்கு சொந்தமான வீட்டை வங்கி தரப்பு ஏலத்திற்கு கொண்டு சென்றது. அங்கிருந்த அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த மதுவந்தி பெரும்பாலான விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையே சொல்லி வருகிறார்.

    English summary
    Temple activist gives complaint against BJP Madhuvanthi West Mambalam priest gives complaint against BJP activist Madhuvanthi for money scam to get school admission from PSBB.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X