சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பதுங்கி இருந்த உல்ஃபா தீவிரவாதி... தமிழக போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்

Google Oneindia Tamil News

சென்னை: வடமாநிலத்தில் இருந்து தப்பிவந்த தீவிரவாதியை, சென்னையில் தமிழக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமாநில போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தமிழக போலீசார் சுற்றிவளைத்து தீவிரவாதியை பிடித்தனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி கந்தர்ப்பதாஸிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக கந்தர்ப்பதாஸ் கடந்த 6 மாத காலம் பணியாற்றி வந்துள்ளார்.

Terrorist Kantharppadoss arrested in Chennai

நேற்று அவர் தங்கியிருந்த அறையில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கைகலப்பாக மாறிய போது, கந்தர்ப்பதாஸ் தான் ஒரு உல்ஃபா தீவிரவாதி என்றும் எச்சரித்துள்ளார். இதனால், அறையில் தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ், சென்னையில் பதுங்கி இருந்தது ஏன்? என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீவிரவாதி கந்தர்ப்பதாசுடன் தங்கியிருந்து, தனியார் மருத்துவமனையில் கட்டிட வேலை செய்து வந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும், போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

லீவு தரல.. விஷம் குடிக்கறேன்.. ஆடியோ வெளியிட்ட 21 வயது பெண் போலீஸ் நந்தினியால் பரபரப்பு! லீவு தரல.. விஷம் குடிக்கறேன்.. ஆடியோ வெளியிட்ட 21 வயது பெண் போலீஸ் நந்தினியால் பரபரப்பு!

முன்னதாக, இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த மர்மநபர், கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்ததார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவர் என தெரியவந்ததால், அவருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். மைக்கேல் பிரீடியை, கைது செய்த பிறகு தான் உண்மை நிலை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
ULFA Terrorist Kantharppadoss arrested in Chennai, Police Investigation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X