சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்.. பெங்களூர் போலீஸ் எச்சரிக்கை கடிதம்.. பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. ஐஎஸ் அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தியது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

 பாம்பன் பாலத்தில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை பாம்பன் பாலத்தில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பயங்கரவாதிகள் தாக்குதல்

பயங்கரவாதிகள் தாக்குதல்

அந்த கடிதத்தில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. ரயில்களில் குண்டு வைக்க போவதாக எங்களுக்கு தகவல் வந்தது.

தொலைபேசி அழைப்பு

தொலைபேசி அழைப்பு

எங்களுக்கு வந்த தொலைபேசி தகவலில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர் என்பவர் தகவல் அளித்தார். ஓடும் ரயில்களில் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. முக்கிய நகரங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது .

முன்னெச்சரிக்கை வேண்டும்

முன்னெச்சரிக்கை வேண்டும்

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஎஸ்பிக்கு பெங்களூரு காவல்துறை கடிதம் எழுதியுள்ளார்கள். இதையடுத்து தமிழக காவல்துறையை கவனமாக இருக்கும்படி தமிழக அரசின் முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

தமிழகம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்துபடி போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கிறார்கள். இந்த கடிதம் காரணமாக தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Terrorists may attack Tamilnadu says Bengaluru police in a warning letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X