சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஜவுளித் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜவுளித் துறையினர் விடுத்துள்ள கோரிக்கையில், தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கொரானாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டு வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது.

கொரானா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வரும் தொழில்களில் ஜவுளித்துறையும் மிகவும் முக்கியமானது.

Textile shops demands to allow them to open shops

* எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்

* நாங்கள் வியாபாரம் செய்யும் பில்டிங் ஓனர்க்கு வாடகை செலுத்த வேண்டும்.

* மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம்

* GST, TDS, PF, ESI வரிகள் கட்ட வேண்டும்

* நாங்கள் வங்கிகளில் தொழில் செய்ய கடனாக பெற்ற தொகைக்கு EMI மற்றும் வட்டி கட்ட வேண்டும்.

* கடைகள் ஊரடங்கு காலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளதால் கடையில் உள்ள விலையுயர்ந்த ஜவுளிகள் பட்டுசேலைகள் இவையனைத்தும் வீணாகியுள்ளன.

* மின்சாதன பொருட்களான A/C, ஜெனரேட்டர், கணினிகள் பழுதடைந்துள்ளது . இவற்றை சரிசெய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு.. திமுகவுக்கு எதிராக குஷ்பு கொந்தளிப்பு.. இனி ஒன்றிய அரசு.. திமுகவுக்கு எதிராக குஷ்பு கொந்தளிப்பு.. இனி

ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எண்ணற்ற இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்துக் கொண்டு இருக்கும். ஜவுளித் துறையினர் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஜவுளித் துறையினருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும், மாண்புமிகு தமிழக முதல்வரை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கொரானா கால விழிப்புணர்வாக மாஸ்க் அணிவது சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம்மேற்கொள்வோம் என்று உறுதி கூறுகிறோம் என துணிக்கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

English summary
Textile shops demands to allow them to open shops considering livelihood of their employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X