சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட போது அங்கிருந்த தா பாண்டியன் கடுமையாக காயமடைந்திருந்தார். எனினும் தனது இறுதி மூச்சுவரை 7 தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டார்.

சிறுநீரக கோளாறால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தா பாண்டியன் உயிரிழந்தார். அவர் இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பிரதமர்களின் பேச்சை மொழி பெயர்த்தவர்.

அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார்.

தா.பாண்டியன் மக்களை ஈர்த்த பேச்சாளர்; மனதில் பட்டதை துணிவுடன் பேசுபவர்... டி.டி.வி தினகரன் புகழாரம்!d.

கைகுலுக்கல்

கைகுலுக்கல்

21 ஆம் தேதி மே மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது அவர் ஒரு பேரணியை நடத்தினார். பின்னர் தனது காரில் பிரச்சார மேடைக்கு வந்தார். அங்கிருந்து பிரச்சார மேடை இருக்கும் இடத்தை நோக்கி வந்த போது ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்தும் கைகுலுக்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தற்கொலை படை

தற்கொலை படை

அப்போது விடுதலை புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்த தாணுவும் ராஜீவ் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் கால்களில் விழுவது போல் குனிந்து தனது உடலில் மறைத்து வைத்திருந்த ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அப்போது ராஜீவ் காந்தி, அவரை சுற்றியிருந்த 15 பேரும் கொல்லப்பட்டனர்.

மொழிப்பெயர்ப்பு

மொழிப்பெயர்ப்பு

இந்த படுகொலை சம்பவத்தில் காவலர்கள், கமாண்டோ வீரர்கள், போலீஸார் என பலர் காயமடைந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களில் தா பாண்டியனும் ஒருவர். படுகாயமடைந்த தா பாண்டியன் ராஜீவ் காந்தியின்பிரச்சார பேச்சை மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக வரவழைக்கப்பட்டார்.

விடுதலை புலிகள் போர்க்குணம்

விடுதலை புலிகள் போர்க்குணம்

இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகளின் போர்க்குணத்தை எதிர்த்த போதிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காண இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு தா பாண்டியன் அழைப்பு விடுத்தார். அது போல் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதமும் தா பாண்டியன் எழுதியிருந்தார்.

English summary
Tha Pandiyan was one of the those seriously injured in the bomb blast that killed former PM Rajiv Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X