சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி

தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "அவள் எல்லாம் ஒரு கட்சி தலைவியா?ன்னு கேட்டு என் மானத்தை வாங்கிட்டு வர்றார் பாலாஜி. அதான் இங்க போட்டியிடாம, டெல்லியில போட்டியிடலாம்னு இருக்கேன்" என்று தாடி பாலாஜி மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

ஒரு சில வருடங்களாக தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படி பிரிந்து கிடப்பவர்களை பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இணைத்து பரபரப்பாக்கி ரேட்டிங்கை உயர்த்தி கல்லா கட்டப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களின் போட்ட சண்டைகள், சோஷியல் மீடியாவுக்கு தீனியை போட்டன!

ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ் ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்

ஸ்வேதா ஷெட்டி

ஸ்வேதா ஷெட்டி

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு தேசிய பெண்கள் கட்சி என்னும் ஒரு கட்சி தொடங்கப்பட்டது. பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள கட்சி இது. இதன் தலைவர் ஸ்வேதா ஷெட்டி என்பவர். 36 வயதான இவர் ஒரு டாக்டர். சமூக ஆர்வலரும்கூட.

தமிழக தலைவர்

தமிழக தலைவர்

இவரது கட்சியில்தான் நித்யா சமீபத்தில் இணைந்ததுடன் அந்த கட்சியின் தமிழக தலைவராகவும் உள்ளார். இப்போது அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுவதாக கூறுகிறார். இதுபற்றி நித்யா சொல்லும்போது:

மானம் போகுது

மானம் போகுது

"காஞ்சிபுரம் தனி தொகுதியில்தான் போட்டியிடலாம்னு இருந்தேன். ஆனா தமிழ்நாட்டில் நான் எங்க போட்டியிட்டாலும், அங்க போய் என் மானத்தை வாங்க பாலாஜி பிளான் பண்ணி இருந்தார். எங்க கட்சி நிர்வாகிகிட்டயே போன் செய்து, "அவள் எல்லாம் ஒரு கட்சி தலைவியா"ன்னு கேட்டு பிரச்சனை பண்ணி இருக்கார்.

ஆதரவு தருவார்கள்

ஆதரவு தருவார்கள்

அதனால இப்போ இங்கே நான் போட்டியிட்டால் எப்படியும் என் மீது அவதூறு பரப்புவார். அதனால டெல்லியில் போட்டியிடலாம்னு இருக்கேன். எங்க நிர்வாகிகளும் இதைதான் சொன்னாங்க. வடக்கு டெல்லியில் நிறைய தமிழர்கள் வசிக்கிறாங்க. எனக்கு எப்படியும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு" என்றார்.

English summary
Thadi Balaji Wife Nithya contesting in Delhi on behalf of National woman party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X