சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை புரட்டிப் போட வரும் 'கஜா' புயல்... நவம்பர் 16ல் உஷார் மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது. கஜா புயல் நவம்பர் 16ல் கடலூர் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என்றும் இது வர்தா புயலைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும், அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14ம் தேதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Thailand named the cyclone gaja formed in Bay of Bengal as Gaja

இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 12க்குள் கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புயல் தமிழகம் ஆந்திரா நோக்கி நகரும் போது வடகடலோர தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்றும் கடலில் காற்றின் வேகம் 90 - 100 கி.மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்திலும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

[சென்னையை நெருங்கும் புயல்.. 15-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.. நிழலாடும் 2015]

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து சார்பில் கஜா என்று புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் என்று ஐரோப்பிய வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்தப் புயலானது கடலூர் - பரங்கிப்பேட்டை இடையே நவம்பர் 16ம் தேதி கரையைக் கடக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Thailand named the cyclone formed in Bay of Bengal as Gaja, European weather experts alerts the cyclone will fall down on November 16 between Cuddalore and Parangipettai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X