சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்..? பாரத ஸ்டேட் வங்கிக்கு வேல்முருகன் கண்டனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

குழப்பத்தை ஏற்படுத்தும் பாரத ஸ்டேட் வங்கிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு?ஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு?

எஸ்.பி.ஐ. வங்கி

எஸ்.பி.ஐ. வங்கி

பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே போன்று உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கட் ஆஃப்

கட் ஆஃப்

குறிப்பாக, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட ஏழைகள் ஆகிய பிரிவினருக்கு, ஒரே விழுக்காட்டில் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது எந்த வகையில் நியாயம்?. அதை விட உயர்சாதி ஏழைகள் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக உள்ளது. அதாவது, 47.75 விழுக்காடு மட்டுமே.

வங்கிக்கு கேள்வி

வங்கிக்கு கேள்வி

இந்தக் கட் ஆஃப் விவரங்கள் சமுக யதார்த்தங்களோடு பொருந்துமா என எண்ணிப் பார்த்தால், பாரத ஸ்டேட் வங்கி இட ஒதுக்கீடு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும். மேலும், பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும்போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்களா?. அந்த நெறி கடைப்பிடிக்கப்படுமா?

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

எனவே, தற்போது ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள விபரங்கள், பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனென்றால், ஸ்டேட் வங்கி தொடர்ந்து இட ஒதுக்கீடு நெறி முறைகளை கடைப்பிடிப்பதில்லை. இட ஒதுக்கீடு முறையில் பாரத ஸ்டேட் வங்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

விசாரணை தேவை

விசாரணை தேவை

அதனால், இவ்விவகாரம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்க வேண்டும். அதோடு, ஸ்டேட் வங்கியின் இட ஒதுக்கீடு மீறல் குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உரிய விசாரணை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

English summary
Thamizhaga vazhvurimai katchi president velmurugan condemn to SBI Bank
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X