சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு... வேல்முருகன் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: கொத்தடிமை முறையை புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் கொண்டுவந்து மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு புதிதாக கொண்டு வரும் புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இலங்கையில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை இலங்கையில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை

நடைபயணம்

நடைபயணம்

ஒன்றிய அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிந்தபோதும், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவில்லை, ஒண்ட இடமில்லை. பிரதமர் நிவாரண நிதி, புதிரான பிரதமர் கருணை நிதி இருந்தும் சல்லிக்காசும் கிடைக்கவில்லை. சொந்த ஊரில் போய்ச் சாக வேண்டும் என்பதே அந்த நடைப்பயணத்தின் ஒரே குறிக்கோள் என்றால், இந்த நாட்டின் - தொழிலாளர்களின் அவலம் நமக்குப் புரியாமல் எப்படி?

44 தொழிலாளர் நலச் சட்டங்கள்

44 தொழிலாளர் நலச் சட்டங்கள்

உழைப்புச் சுரண்டல் மேலும் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்காக நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4 தொகுப்புகளைக் கொண்ட புதிய தொழிலாளர் நலச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதில் (1) ஊதியம் குறித்த தொகுப்பு, (2) தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, (3) பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, (4) சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு உள்ளது.

தொழிலாளிகளுக்கு வழிகாட்டுதல்

தொழிலாளிகளுக்கு வழிகாட்டுதல்

ஏற்கனவே உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளும், அவற்றைப் பின்பற்றத் தவறினால் தண்டனைகள் மற்றும் அபராதங்களும் உண்டு; சட்ட அமலாக்கம், தொழில்-தொழிலாளி பிரச்சனை குறித்த கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளும் உண்டு. அத்தனையையும் நீக்கிவிட்டு, தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதியை, தொழிலாளிக்கான வழிகாட்டுதல்கள் என மாற்றியுள்ளனர்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

குறைந்தபட்ச கூலி நிர்ணயம், பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், எட்டு மணி நேர வேலை, ஏன், தொழிற்சங்க உரிமையே கூட கிடையாது எனப் புதிய கொத்தடிமை முறையை, "புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு" என்ற பெயரில் கொண்டுவந்து இந்திய மக்களையே இளிச்சவாயர்களாகப் பார்க்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதைத் திரும்பப்பெற வலியுறுத்துமாறு தமிழக அரசைக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

English summary
thamizhaga vazhvurimai katchi president velmurugan criticize central govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X