சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. இதுவன்றோ அரசியல்.. ஈபிஎஸ், ஓபிஸ்ஸை புகழ்ந்த கையோடு ஸ்டாலினுடன் கை குலுக்கிய தங்கம்!

அதிமுகவை புகழ்ந்து கொண்டே, திமுகவில் இணைந்துவிட்டார் தங்க தமிழ்செல்வன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ்.. ரெண்டு பேரும் நல்லவங்கதான்.. என்று சொல்லி வாய் மூடலை.. அதுக்குள்ள ஓவர்நைட்டில் திமுக பக்கம் நின்று, அறிவாலயத்தில் சிரித்தபடியே ஸ்டாலினுக்கு கை கொடுத்துள்ளார் தங்க தமிழ்செல்வன்.

    இந்த 3 வருஷமாக திமுக தலைவர் ஸ்டாலினைவிட, முதல்வர் எடப்பாடியை அதிகமாக விமர்சித்தது தங்க தமிழ்செல்வன்தான். கொலை பழியை நிரூபிக்க வேண்டியதுதானே என்று சவால் விட்டவரும்கூட.

    இந்த சமயத்தில்தான் அமமுகவுக்குள் மோதல் அதிகமானது. அதனால் எப்படியும் தாய்க்கழகத்தில்தான் இணைவார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் பலத்த எதிர்ப்பு அதிமுகவுக்குள் கிளம்பியது. இன்னொரு பக்கம் செந்தில்பாலாஜி, கலைராஜன் மூலம் திமுகவுக்குள் இழுக்க காய் நகர்த்தப்பட்டது.

    தன்னைப்போல் தவித்த தங்க தமிழ்ச்செல்வன்.. உதவிய செந்தில் பாலாஜி.. சட்டென மாறிய காட்சிகள் தன்னைப்போல் தவித்த தங்க தமிழ்ச்செல்வன்.. உதவிய செந்தில் பாலாஜி.. சட்டென மாறிய காட்சிகள்

    பேட்டி

    பேட்டி

    அதிமுகவா, திமுகவா, எந்த பக்கம் போக போகிறார் செந்தில்பாலாஜி.. என்ற குழப்பமான கேள்வி எழுந்தது. பலவித யூகங்கள், சந்தேகங்கள், எழுந்த சமயம்தான் ஒரு பேட்டி தந்தார் தங்க தமிழ்செல்வன். அதுவும் எப்போதோ இல்லை.. நேற்றுதான்.

    தொல்லைகள்

    தொல்லைகள்

    செய்தியாளர்களிடம் பேசியபோது, "இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சிறப்பாக தேர்தல் வியூகம் அமைத்தனர். ஆனால் அதிமுக தொண்டர்களை வழிநடத்துவதில் ரெண்டு பேருக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்று தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து இருவரும் நடத்தி வருகின்றனர். இந்த 2 வருஷமா அதிமுக அரசுக்கு பல தொல்லைகள் தரப்பட்டது.

    வித்தைகள்

    வித்தைகள்

    ஏன், ஆட்சியை கவிழ்க்க கூட பல திட்டங்கள் போட்டனர். அனைத்து கட்சிகளுமே அதிமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தின. எத்தனையோ வித்தைகளை நாங்கள் போட்டு பார்த்தும், எதுவும் நடக்கவில்லை. ஆட்சியை கலைக்க எடுத்த முடிவுகள் எல்லாமே தோல்வியில் போய்விட்டது. இதெல்லாம் எதைகாட்டுகிறது? இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஜெயித்து விட்டனர் என்று தானே அர்த்தம்?" என்றார்.

    புகழ்ச்சி

    புகழ்ச்சி

    அறிவாலயத்தில் இப்போது சிரித்தமேனிக்கு போஸ்கொடுத்து கொண்டிருக்கும் தங்க தமிழ்செல்வனா இதை பேசியது என்பது ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு காலம் இல்லாமல் இந்த புகழ்ச்சியை நேற்று ஏன் வந்து சொல்ல வேண்டும்? இதை வேண்டுமென்றே சொன்னாரா, அல்லது மீடியாவை குழப்ப வேண்டும் என்று சொன்னாரா? என தெரியவில்லை.

    திமுக டீல்

    திமுக டீல்

    இந்த பேட்டியில் ஒரு தெளிவின்மை காணப்படுகிறது. தங்க தமிழ்செல்வனே குழம்பி போய் உள்ளது போலவும் தெரிகிறது. அதை நிரூபிப்பது போல இப்போது திமுகவிடம் போய்ச் சேர்ந்து விட்டார் தமிழ்ச்செல்வன். என்ன டீல் பேசப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அதிமுகவை விட திமுக தரப்பு செமத்தியான டீல் பேசியே தங்கத்தை இழுத்திருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

    English summary
    Thanga Tamil selvan who praised the AIADMK gov and he has joined in DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X