சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன்?.. தர்மசங்கடத்தில் எடப்பாடி!- வீடியோ

    சென்னை: கூவத்தூரில் எங்களை தினகரன் அடைத்துவைத்தார் என்று கூறியுள்ளார் தங்க தமிழ்செல்வன். அவர் அடைத்து வைத்தால் என்ன இவர் தப்பி வந்திருக்கலாமே என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் குதிரை பேரம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலா தரப்பு தங்களிடம் உள்ள 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்திருந்தனர்.

    அப்போது எம்எல்ஏக்கள் இருந்த ரிசார்ட்டை சுற்றிலும் ஆட்கள் நிறைய பேர் இருந்தனர். இந்த நிலையில் சசிகலாவை அதிமுகஎம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்த அதிமுகவினர், அப்போதைய பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

    எம்எல்ஏ

    எம்எல்ஏ

    இதற்காக கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த 122 எம்எல்ஏக்களும் சொகுசு பேருந்தில் ஆளுநர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது சசிகலா தலைமையை ஏற்க விரும்பாததாலும் சசிகலாவை ஆதரிப்பதை தனது தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்து பேருந்தில் இருந்து தப்பி வந்தார் கோவை வடக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ அருண்குமார்.

    தங்கதமிழ்ச் செல்வன்

    தங்கதமிழ்ச் செல்வன்

    அது போல் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தவுடன் தினகரனை 19 எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். இதையடுத்து அவர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் புதுவையில் உள்ள ரிசார்டில் இந்த 19 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அங்கு எல்லாரையும் விட சிறு பிள்ளை போல் என்ஜாய் செய்தது ஷாத்ஷாத் தங்கதமிழ்ச் செல்வன்தான்.

    பரபரப்பு

    பரபரப்பு

    எம்பி எம்பி த்ரோபால் விளையாடுவது என்ன, ஊஞ்சல் விளையாடுவது, உடல்பயிற்சி செய்வது என அனைத்தையும் செய்தார். இந்த நிலலையில் இந்த 19 பேரும் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது ஜக்கையன் எம்எல்ஏ அந்த கூடாரத்திலிருந்து தப்பி ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூடாரத்திற்கு வந்தடைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    அடைத்து வைத்தது

    அடைத்து வைத்தது

    இதைத் தொடர்ந்து மீதமிருந்த 18 பேரும் கர்நாடகத்தில் கூர்கில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தினகரனுடனான மோதல் போக்கை கொண்ட தங்கதமிழ்ச் செல்வன், இன்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்களை கூவத்தூர், புதுவை, கூர்க்கில் அடைத்து வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஜக்கையன்

    ஜக்கையன்

    அன்று அடைத்து வைத்திருந்த போது மக்கள் பணிகள் குறித்து அக்கறையின்றி ஊஞ்சல் விளையாட சென்ற தங்கதமிழ்ச் செல்வனை அடைத்து வைப்பதற்கு அவர் என்ன குழந்தையா. ஏற்கெனவே இது மாதிரியான விவகாரங்கள் அருண் குமாரும், ஜக்கையனும் எப்படி தப்பி வந்தனரோ அது போல் தப்பியிருக்கலாமே.

    ஆசை அதிகம்

    ஆசை அதிகம்

    இல்லாட்டி சுவர் ஏறியாவது குதித்திருக்கலாம். அத கூட விடுங்க, கூர்கில் போலீஸார் ரெய்டு வந்த போதாவது தன்னை தினகரன் கடத்தி வைத்திருக்கிறார் என கூறி அவர்களிடம் தன்னை மீட்க உதவி கேட்டிருக்கலாமே. இதையெல்லாம் விட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு சுயேச்சையான தினகரன் வெற்றி பெற்றதால் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோருக்கு ஆசை அதிகமாயிற்று.

    சும்மாவா

    சும்மாவா

    எப்படியும் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்ற கனவில் மிதந்திருந்த தங்கத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் பேரிடியை அளித்தது. இதனால் இப்போது இவர் இது போல் எடுத்தெறிந்து பேசி வருகிறார். அரசியல்வாதிகள் பணம் ,பதவி இல்லாமல் இருக்கமாட்டார்கள் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

    English summary
    Thanga Tamil Selvan might be escaped from TTV Dinakaran's camp which was in Koovathur, Pondicherry, Coorg.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X