சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தங்கம்" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா?.. அடேங்கப்பா!

தங்க தமிழ்செல்வனை திமுக தரப்பில் இழுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanga tamil selvan about TTV: தோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்- வீடியோ

    சென்னை: போற போக்கை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம்தான் போவார் போல தெரிகிறது. கசிந்து வரும் தகவல்கள் எல்லாம் அதைதான் மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

    அமமுகவில் தங்க தமிழ்செல்வன் விவகாரம் வெடித்ததுமே அதிமுகவுக்குதான் தாவுவார் என்று பரபரக்கப்பட்டது. காரணம், அது தாய்கழகம் என்பதால்தான்!

    ஆனால் தொகுதியில் தனக்கு நிகராக பேசப்படும், செல்வாக்கு பெற்றுள்ள தங்க தமிழ்செல்வனை ஓபிஎஸ் ஏற்பாரா என தெரியவில்லை. அப்படி முட்டுக்கட்டை போட்டால் அதற்கு எடப்பாடி தரப்பு என்ன செய்யும் என்றும் தெரிவில்லை.ஒருவேளை ஓபிஎஸ்ஸை மீறி கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டால், ஓபிஎஸ் நிலைப்பாடும் புரியவில்லை.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    இதற்கு நடுவில் தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்று வலியுறுத்தி, "துரோகியை கட்சிக்குள் இணைக்காதே" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதனால் இவ்வளவையும் மீறி அதிமுகவுக்குள் தங்க தமிழ்செல்வன் செல்வாரா என்பது சந்தேகம்தான்.

    சுமூக சூழல்

    சுமூக சூழல்

    ஆனால் திமுக தரப்பை எடுத்து கொண்டால், அங்கு தங்க தமிழ்செல்வனை பொறுத்தவரை சுமூகமான சூழல்தான்! முதல்வரை இந்த 3 வருடமாக விமர்சித்த அளவுக்கு ஸ்டாலினை தங்க தமிழ்செல்வன் விமர்சிக்கவில்லை. அடுத்ததாக, அந்த கட்சியில் உள்ள செந்தில்பாலாஜியும், கலைச்செல்வனும் தங்க தமிழ்செல்வனுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர்கள். அதனால்தான் திமுகவுக்குள் இழுக்கும் வேலையை மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி, வி.பி. கலைராஜனிடம் தந்துள்ளார்.

    டிமாண்ட்

    டிமாண்ட்

    இப்போது விஷயம் என்னவென்றால், திமுகவுக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளதாம். இதில் தங்க தமிழ்செல்வன் போடும் ஒரே கண்டிஷன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு கவுரவமான பதவி தரவேண்டும் என்பதுதானாம். தங்க தமிழ்செல்வன் இப்படி டிமாண்ட் வைப்பதிலும் தவறில்லை. தொகுதியையும் தாண்டி அனைத்து மட்டத்திலும் செல்வாக்கை பெற்றவர் தங்க தமிழ்செல்வன்.

    கெத்து

    கெத்து

    இதற்கு காரணம், அன்று ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆண்டிப்பட்டி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போய், அதிமுகவின் தேனி வேட்பாளர் மற்றும் எம்பியாகவும் வளர்த்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அப்போது ஏற்பட்ட கெத்தும் மரியாதையும் இன்னமும் அரசியல் களத்தில் தங்கதமிழ்செல்வனுக்கு நீடித்தே வருகிறது.

    ஒரே கண்டிஷன்

    ஒரே கண்டிஷன்

    இன்றுவரை தென்மாவட்டங்களில் உள்ள கட்சியினரின் நன்மதிப்பை பெற்றவர் இவர், உள்ளே இழுத்தால், தென்மாவட்டங்களை பற்றின கவலை இனி இருக்காது என்று திமுக கருதுகிறது. அதுமட்டுமில்லை, ஓபிஎஸ்ஸை சமாளிக்க இப்போதைக்கு இவர்தான் சரியான நபர் என்று திமுக கணக்கு போடுகிறது. அதனால் தங்க தமிழ்செல்வனின் இந்த டிமாண்டுக்கு திமுகவும் உறுதி அளித்துவிடும் போல் தெரிகிறது.

    English summary
    It is said that, Thanga Tamil Selvan has demanded the DMK to have an honorary post
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X