சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்னு திரியை கொளுத்தி போட்ட "தங்கம்".. இனிமேல்தான் பிரச்சினையே.. அதிமுக அதிருமா?!

இனிமேல்தான் அதிமுகவுக்குள் பிரச்சனை வெடிக்கும் என்கிறார் தங்க தமிழ்செல்வன்

Google Oneindia Tamil News

சென்னை: "பிரச்சனை தீரவில்லை... இனிமேல்தான் பிரச்சனை தொடங்க போகிறது" என்று தங்க.தமிழ்செல்வன் கொளுத்தி போட்டுள்ளது மிகப்பெரிய அதிர்வலையை திராவிட கட்சிகளில் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு நாள் ஜவ்வு மாதிரி இழுத்து கிடந்த அதிமுகவின் உட்கட்சி விவகாரம், நேற்றுதான் ஒரு முடிவுக்கு வந்தது.. வழிகாட்டு குழுவை அமைத்துவிடவும், இதன்மூலம் சமாதானமான இரு தரப்பும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.. இதையொட்டி, தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

இந்த சமயத்தில், திமுகவின் தங்க தமிழ்செல்வன் இதை பற்றி ஒரு கருத்து சொன்னார்.. "பிரச்சனை தீரவில்லை... இனிமேல்தான் பிரச்சனை தொடங்க போகிறது... 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி குழுவினரும், ஓ.பன்னீர்செல்வம் குழுவினரும் தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே வேலை பார்க்க தொடங்குவார்கள்" என்று சொன்னதுமே பல கேள்வி, சந்தேகங்களை அது எழுப்ப தொடங்கிவிட்டது.

 புதிய விவசாய சட்டங்களை கண்டித்து 'கண்டன மாநாடு'... தமிழக காங்கிரஸ் கமிட்டி சுறுசுறுப்பு..! புதிய விவசாய சட்டங்களை கண்டித்து 'கண்டன மாநாடு'... தமிழக காங்கிரஸ் கமிட்டி சுறுசுறுப்பு..!

 மோதல்

மோதல்

தங்க தமிழ்செல்வன் ஏன் அப்படி சொன்னார் என்று அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "பிரதான எதிர்க்கட்சி என்பதால் தங்க தமிழ்செல்வன் அப்படி சொல்லி இருக்கலாம்.. ஆனால், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் மோதிக் கொண்டால் அது கட்சியை வலுவிழக்க செய்வதுடன் திமுகவுக்கு வெற்றியைதான் சம்பாதித்து தரும் என்பதை லேட்டாகதான் உணர்ந்துள்ளது.. அதனாலேயே 2 பேரும் இறங்கியும் வந்துள்ளனர்.

 தனித்து வெற்றி

தனித்து வெற்றி

ஒருவிஷயத்தில் இவர்களை பாராட்ட வேண்டும்.. எத்தனை பலம் பொருந்திய கட்சியாக திமுக உருவெடுத்து வந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நின்று வெற்றி பெறும் வகையில்தான் அந்த கட்சியை ஜெயலலிதா வளர்த்து விட்டு போயுள்ளார்.. அதனால்தான் மாஸ் வெற்றியை இவர்களால் தர முடியாவிட்டாலும், மோசமான தோல்வியை பெற முடியவில்லை.. ஓட்டு வங்கியும் அவ்வளவு பலவீனமாகிவிடவில்லை.

அதிமுக

அதிமுக

ஆனால் பிரச்சனை எங்கு வெடிக்கும் என்றால், எல்லா சமுதாயத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் அதிமுகவின் செயல்பாடு இனி இருக்குமா? என்பதுதான்.. கூடிய சீக்கிரம் பொதுக்குழு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அமைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுக்குழுவுக்கான வரைமுறைக்கு பொதுக்குழுவில்தான் ஒப்புதல் வாங்க முடியும்.

பிரதிநிதிகள்

பிரதிநிதிகள்

எல்லா தரப்பினரையும் அரவணைத்து செல்லும் வகையில்தான் குழுவில் இடம் பிரதிநிதிகள் உள்ளதாக அதிமுக தலைமை நினைக்கிறது. ஆனால், இதிலும் சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில்தான் உள்ளனர்.. எதிர்பார்க்கப்பட்ட பலரும் லிஸ்ட்டில் இல்லை.. இனிமேல் அவர்களை சமாதானப்படுத்தியே ஆக வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு உள்ளது.

வசீகரம்

வசீகரம்

அதேபோல, தலித் வாக்கு இவங்களுக்கு ரொம்ப முக்கியம்.. ஏன் என்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஈர்ப்பு மிக்க ஆளுமைகளின் வசீகரத்தால்தான் கணிசமான தலித் வாக்குகள் அதிமுகவுக்கு இதுவரை தரப்பட்டு வந்திருக்கின்றன.. எம்ஜிஆர் இறந்ததற்கு தலித் வாக்குகளை அதிமுகவை நோக்கி ஈர்க்கும் ஆளுமையாக ஜெயலலிதா இருந்தார்.. அவங்களும் இறந்துவிட்ட நிலையில், அதிமுகவை நோக்கி தலித் வாக்குகளை ஈர்க்கும் ஆளுமை என குறிப்பிட்டு சொல்லும்படி அங்கு யாரும் இல்லை.. இதை அதிமுக உடனடியாக சரி செய்யணும்.

 கட்சி தாவல்

கட்சி தாவல்

அதுமட்டுமல்ல.. திமுகவில் இருந்து விலகியவர்கள் பொதுவாக அதிமுகவுக்கும், அதிமுகவில் இருந்து விலகியவர்கள் திமுகவுக்கும் செல்வதுதான் காலங்காலமாக இருந்து வரும் வழக்கம்.. ஆனால், நிலைமை இப்போது மாறி வருகிறது.. திமுகவில் இருந்து ஸ்டிரைட்டாக பாஜகவுக்கு போகும் புது பழக்கம் துவங்கி உள்ளது.

பாஜக

பாஜக

இதற்கு என்ன காரணம்? பாஜக வளர்ந்திருக்கிறதா? இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் போக வேணாம்.. ஆனால் அதிமுகவுக்கு ஏன் போகவில்லை என்ற கேள்வி எழுகிறது... திராவிட கட்சியியால் வளர்க்கப்பட்டவர்கள், அதிமுகவுக்குதான் வர வேண்டுமே தவிர, சித்தாந்தம் மாறி பயணிக்க தொடங்கி உள்ளது அதிமுகவின் குறையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 விசாரணை

விசாரணை

அதுமட்டுமல்ல.. கனிமொழியின் 2 ஜி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது... ஆ.ராசாவும் சற்று அமைதி காத்து வருகிறார்.. தேர்தல் சமயத்தில் இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு எதிராகவே இருக்கலாம்.. அதனால் பாதிப்பு திமுகவுக்குதான் இருக்கும்.. எனவே இதையெல்லாம் அதிமுக கருத்தில் கொண்டு கள வேலைகளில் இறங்க வேண்டும்.

 வியூகங்கள்

வியூகங்கள்

இதைதவிர, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், மாற்று கட்சியில் இருந்துபிறரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வியூகத்தையும் அதிமுக இனி கையில் எடுக்க வேண்டும்.. இதெல்லாம் சரி செய்யாவிட்டால், "பிரச்சனை இனிமேல்தான் தொடங்க போகிறது" என்று தங்க தமிழ்செல்வன் சொல்வதுபோல்தான் நடக்கும்" என்றனர்.

English summary
Thanga Tamilselvan says AIADMK will see more troubles soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X