சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிராமிஸா சொல்றேன்ங்க.. நான் எந்த பதவியையும் ஸ்டாலினிடம் கேட்கவில்லை.. தங்கதமிழ்ச் செல்வன்

Google Oneindia Tamil News

சென்னை: பிராமிஸாக சொல்றேன், நான் எந்த பதவியையும் ஸ்டாலினிடம் கேட்கவில்லை என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கும் பொதுச் செயலாளராக உள்ள தினகரனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

Thanga tamilselvan says that he didnt ask any post from DMK

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. இதையடுத்து அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச் செல்வன்.

அவர் தேனி மாவட்டத்தில் ஸ்டாலினை வரவழைத்து பிரம்மாண்ட மாநாட்டையும் நடத்தினார். இந்த நிலையில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

Exclusive: கொசு ஒழிப்பு ஒப்பந்தத்திற்கு எதற்கு முதல்வர் தேவை.. தங்க தமிழ்ச்செல்வன் கேள்விExclusive: கொசு ஒழிப்பு ஒப்பந்தத்திற்கு எதற்கு முதல்வர் தேவை.. தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

இதனால் மகிழ்ச்சி அடைந்த தங்கம், சென்னை அறிவாலயத்தில் முக ஸ்டாலினை சென்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி. திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோருடன் பணிபுரிவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பிராமிஸாக நான் சொல்றேன். எந்தப்பதவியையும் கேட்கவில்லை. நான் இந்த கட்சியில் இணைந்ததற்கு காரணமே ஸ்டாலினின் திறமையை பார்த்துதான். மத்தபடி எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.

English summary
Thanga tamil selvan says that he didnt ask MK Stalin to offer him any posts. He is now appointed as Propaganda Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X