சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்டில் வாங்க மக்கள் கஷ்டப்பட கூடாது.. இதற்காகவா தனியரசு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்??

நடமாடும் டாஸ்மாக் கடை தேவை என தனியரசு கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடமாடும் டாஸ்மாக் கடைகளுக்கு கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ. தனியரசு

    சென்னை: தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளது, அதுவும் பேரவையிலேயே இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ஒரு கோரிக்கை விடுத்தார்.

    அதில், "கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தால் மாலை நேரங்களில் ஒரு பாட்டில் வாங்குவதற்கு கூட சிரமமாக உள்ளது.

    வச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி வச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி

    புதுப்படம்

    புதுப்படம்

    அந்த காலத்தில் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கஷ்டப்படுவதை போல் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. எனவே இந்த சிரமத்தை போக்க அரசு நடமாடும் டாஸ்மாக் மதுபான கடையை கொண்டுவர வேண்டும்" என்றார். எம்எல்ஏ இப்படி சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்ததாம்.

    இல்லை

    இல்லை

    உண்மையிலேயே சிரிப்பதற்காகத்தான் தனியரசு இப்படி சொன்னாரா, அல்லது சீரியஸாகத்தான் சொன்னாரா? என்று தெரியவில்லை. குடிக்கவே தண்ணி இல்லாமல், இன்னொரு ஊரிலிருந்து கொண்டு வந்து தரும் அவலத்தை நினைத்து யாருமே கவலைப்படாத நிலையில், நடமாடும் டாஸ்மாக் அவசியம்தானா? என்ற கேள்வி எழுகிறது.

    கொங்கு மண்டலம்

    கொங்கு மண்டலம்

    எத்தனையோ குடும்பங்கள் இந்த குடியால் சீரழிந்து போயுள்ளன. இதே கொங்கு மண்டலத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை, நடு ரோட்டில் வைத்து ஓங்கி அறைந்தார் ஒரு காவல்துறை அதிகாரி. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் குடி அடிமைகள் பெருகிப் போயுள்ளனர். குடிக்கு எதிராக பெண்கள் நாள்தோறும் தெருவில் போராடிக் கொண்டுள்ளனர்.

    போராட்டம்

    போராட்டம்

    இந்த அவலமான பின்னணியில், இப்படி ஒரு கோரிக்கையை வைக்கத்தான், தனியரசுவை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பினார்களா என்ற கேள்வி எழுகிறது. எத்தனையோ குடும்பங்கள் இந்த குடியால் இறந்து போனாலும் அதனை அரசியல்வாதிகள் கண்டுகொள்வது கிடையாது. ஒப்புக்கு ஒரு போராட்டம் நடத்தி விட்டு எதிர்க்கட்சிகளும் பிழைப்பைப் பார்க்கப் போய் விடுகின்றன.

    தினேஷ்

    தினேஷ்

    ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 17 வயது தினேஷ் என்ற மாணவன், "டாஸ்மாக் கடைகளை தயவுசெய்து மூடுங்கள், இல்லையென்றால் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவேன்" என்று முதல்வருக்கு ஒரு லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலையும் செய்து கொண்டான். அந்த உயிருக்கும் இதுவரை மதிப்பு கிடையாது.

    நந்தினி

    நந்தினி

    ஏன், நந்தினி என்ற பெண், சிறுமியாக இருந்தது முதல் இப்போது வரை இந்த டாஸ்மாக்குக்காக குடும்பத்துடன் ரோட்டில் இறங்கி போடுகிறாரே.. அதற்கும் மதிப்பு கிடையாது. கேட்டால், கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்ற பதில் கிடைக்கிறது.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    ஆனால் தனியரசு வைத்த கோரிக்கையை பார்த்தால் அதிர்ச்சிதான் வருகிறது. அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.. ஆனால் தான் தேர்ந்தெடுத்த பகுதி பெண்களின் நலனைக் கூட கருத்தில் கொள்ளாமல், இப்படி ஒரு கோரிக்கையை எப்படி வைக்க தனியரசுக்கு மனம் வந்தது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    English summary
    In TN Assembly, Kangeyam MLA Thaniyarasu demands about Mobile tasmac shop
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X