சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..மருத்துவர்களுக்கு நன்றி.. ஏஆர் ரகுமான்

Google Oneindia Tamil News

சென்னை: நம் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    இந்தி திணிப்புக்கு எதிராக கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்!- வீடியோ

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. தடுப்பு ஊசிகளும் மருந்துகளும் இல்லாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் , உடல்நலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

    அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒருவர் தும்மல், இருமல், சளி மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றில் மக்கள் தப்பிக்க வேண்டுமெனில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் . வீட்டிலேயே இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மருத்துவர்களுக்கு நன்றி

    மருத்துவர்களுக்கு நன்றி

    இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது," எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இதை கையாள எவ்வளவு தயாராக இருந்தார்கள் என்று பார்க்கும்போது மனசு நிறைந்து விட்டது. நம் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் .

    மருத்துவர்களுக்கு நன்றி

    மருத்துவர்களுக்கு நன்றி

    இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது," எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இதை கையாள எவ்வளவு தயாராக இருந்தார்கள் என்று பார்க்கும்போது மனசு நிறைந்து விட்டது. நம் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் .

    இல்லாதவர்களுக்கு உதவுங்கள்

    இல்லாதவர்களுக்கு உதவுங்கள்

    உலகையே தலைகீழாக மாற்றி உள்ள இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் நமது வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைய வேண்டிய நேரமிது. மனிதம் , ஆன்மீகம் ஆகியவற்றுக்கு அழகை செயலில் கொண்டு வரும் நேரம் இது. நமது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கு மக்களுக்கும் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கும் உதவி செய்வோம்.

    குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்

    கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிக பரிசுத்தமான கோயில். மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசுகளின் அறிவுரையை கேளுங்கள். தனிமை படுத்துக்கொண்டு சில வாரங்கள் இருந்தால் பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்த தொடரை பரப்பி சமூகத்தில் சக மனிதருக்கு தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதை கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது வதந்திகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரமல்ல" இவ்வாறு தனது பதிவிலே ஆர் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness : ar rahuman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X