சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.. கலைஞர் பிறந்த நாளில் நடத்தும் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: மக்களவை மற்றும் பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றியை பரிசளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில், திமுக சார்பாக கூட்டம் நடத்தப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் 37 தொகுதிகளை கைப்பற்றி சாதித்துள்ளது.

Thanks announcement meeting for Tamil voters on June 3.. DMK announced

அதே போல 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இரு தேர்தல்களிலும் தங்களுக்கு வெற்றியை வசமாக்கி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

வரும் ஜூன் 3-ம் தேதி மறைந்த கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளன்று தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

அகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்.. நமது அம்மா அகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்.. நமது அம்மா

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜூன் 3 அன்று மாலை நடைபெற உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், திமுக வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற உள்ள இந்த பிரமாண்ட கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்று பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொதுகூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா? இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா?

English summary
The party leadership has announced that the meeting will be held on behalf of the DMK to thank Tamil voters who have won the Lok Sabha and Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X