சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழை குழந்தைகளின் பசியை போக்கும் அன்னமிர்தா திட்டம்.. கொஞ்சம் உதவுங்கள்!

அன்னமிர்தா மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு உங்கள் உதவியை நீங்கள் செய்ய முடியும்.

சென்னை: அன்னமிர்தா மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு உங்கள் உதவியை நீங்கள் செய்ய முடியும். அன்னமிர்தா மூலம் அவர்களுக்கு உணவு வழங்கிடுங்கள்

ஒன்பது வயது சிறுமி தான் மீனாட்சி. அவளுக்கு பிடித்தது எல்லாம் தன் நண்பர்களுடன் விளையாடுவது மட்டுமே. ஆனால் அவளின் குடும்ப சூழ்நிலை அவளின் சந்தோஷத்திற்கு துணை புரியவில்லை. ஆமாங்க தினமும் வீட்டு வேலைகளை செய்து வரும் அவளின் அம்மாவுக்கு அவள் உதவ வேண்டியிருந்தது. அவளின் தாய் லட்சுமி காலை மாலை பார்க்காமல் தினந்தோறும் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். ஏன் அவருக்கு ஞாயிற்று கிழமை கூட விடுமுறை கிடையாது. இது தான் அவருடைய அன்றாட வாழ்க்கையே. இவர்களின் உணவே வேலை செய்யும் வீட்டில் கிடைக்கும் மிச்ச மீதி உணவுகள் மட்டுமே. அதுவும் சில சமயம் கிடைப்பதில்லை. அப்போ தனக்கும் தன் குழந்தைக்காகவும் உணவு தயாரிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் லட்சுமி.

இதுபோன்ற கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இங்கே நன்கொடை அளித்து உதவிடுங்கள்

Thanks Giving Mid Day meals scheme helps poor children to have lunch

ஒரு தன்னந்தனியாக தாயாக நின்று தினமும் இப்படி வேலை செய்து வருகிறார். பல நேரங்களில் அதிக வேலை காரணமாக தன் அம்மாவுக்கு உதவுவதால் மீனாட்சி பள்ளிக்கு கூட செல்வதில்லை. இதனால் அந்த சின்னஞ்சிறிய குழந்தையின் உலகம் சுருங்கிப் போய் விடுகிறது. குழந்தை பருவ சந்தோஷங்களை அவளால் அனுபவிக்க கூட முடியவில்லை. இது யாருடைய குறை?

நல்ல வேளை லட்சுமி தன் கஷ்டத்தை ஒரு நாள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP) வாயிலாக தெரியப்படுத்தினார். அந்த தேசிய குழுமம் இப்பொழுது மீனாட்சியை அரசாங்க பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறது. அந்த குழந்தையின் சின்னஞ் சிறிய உலகம் இப்பொழுது விரியத் தொடங்கியுள்ளது. புது நண்பர்கள், விளையாட்டு, உணவு என்று தன்னுடைய குழந்தை பருவத்தை அவள் அனுபவித்து வருகிறாள். அன்னமிர்தா திட்டத்தின் மூலம் அவளுக்கு இப்பொழுது வயிறாற ஒரு வேளை உணவு கிடைக்கிறது.

Thanks Giving Mid Day meals scheme helps poor children to have lunch

அவளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை இப்போது இல்லை. குழந்தைக்கு உணவு இல்லை என்ற தன் அம்மாவின் வருத்தமும் இப்பொழுது காணாமல் போய்விட்டது. லட்சுமியும் தன் வீட்டு வேலைகளை மாலையிலேயே முடித்து விட்டு குழந்தையுடன் சந்தோஷமாக நேரம் கழிக்கிறார். அந்த சின்ன வயது சிறுமியின் கனவு ஆசை எல்லாமே ஒரு நாள் சிறந்த ஆசிரியராக ஆவதே.

Thanks Giving Mid Day meals scheme helps poor children to have lunch

நான் வேலைக்கு போய் என் அம்மாவின் சுமையை குறைப்பேன் என்கிறார் அவள். அன்னமிர்தா திட்டத்தின் மூலம் மீனாட்சி போல் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பசி என்ற சங்கிலியை உடைத்து எறிந்துள்ளது.

இதே மாதிரி பல குழந்தைகள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பசி என்ற சங்கிலிக்குள் அடைபட்டு வாழ்கின்றனர். பள்ளிக்கூடம், கல்வி என்பது அவர்களின் கனவாகவே உள்ளது. தேசிய குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் இதுபோன்ற குழந்தைகளை மீட்டெடுத்து அன்னமிர்தா திட்டத்தின் கீழ் ஒருவேளை உணவு வழங்குகிறது.

இந்த குழந்தைகளின் நிலை அவர்களின் பெற்றோரின் தவறுகள் மட்டுமல்ல ஒரு சமுதாயத்தின் தவறும் கூட. " தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார். நம்மைச் சுற்றி எத்தனையோ மீனாட்சி போன்ற சிறுமிகள் உழைத்து வருகிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களின் குழந்தை பருவத்தை மீட்டுக் கொடுங்கள். கல்வி, உணவு வழங்க உதவி செய்யுங்கள். அவர்களின் முகத்தில் உதிரும் புன்னகை தான் நமக்கு கிடைக்கும் பரிசு.

Thanks Giving Mid Day meals scheme helps poor children to have lunch

எங்களுடைய உயர்ந்த நோக்கம் "பசியால் எந்தவொரு குழந்தையும் தங்கள் கல்வியை இழக்கக் கூடாது" என்பதே. அதற்கான சின்ன அடி தான் எங்களுடைய முயற்சி. இது உங்களுடைய நேரம் எங்களுக்கு கை கொடுங்கள், உறுதுணையாக நில்லுங்கள். நம்முடைய ஆடம்பர செலவுகளை குறைத்து இது போன்ற குழந்தைகளுக்கு உதவுங்கள்.

Thanks Giving Mid Day meals scheme helps poor children to have lunch

நாம் தினமும் வீணாக்கும் உணவுகளில் எத்தனையோ சிறு உள்ளங்களின் பசியும் அடங்கி இருக்கிறது. மீதம் வீணாக்கும் உணவை கூட நீங்கள் 10 குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.

உங்களுடைய ஒரு சிறு உதவி பல ஏழைக் குழந்தைகளுக்கு எதிர்காலத்தை கொடுக்கும். நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு அரசாங்கம் 80ஜி சட்டத்தின் கீழ் வரி விலக்கை அளிக்கிறது.

குழந்தைகளுக்கு கல்வி வழங்க நினைத்தால்

10 குழந்தைகள் - 4 500 ரூபாயை நன்கொடையாக வழங்கலாம்

30 குழந்தைகள் (ஒரு வகுப்பறை) - 13,500 ரூபாய்

90 குழந்தைகள் (3 வகுப்பறை) - 40,500 ரூபாய்

ஒரு ப்ரைமரி பள்ளிக்கு(100 குழந்தைகள்) - 45000 ரூபாய்

இரண்டு ப்ரைமரி பள்ளிக்கு(200 குழந்தைகள்) - 90,000 ரூபாய்

ஒரு அரசாங்க பள்ளிக்கு - 2,50,000 ரூபாய்.

இப்போதே உதவிடுங்கள்!!

அன்னமிர்தாவைப் பற்றி

அன்னமிர்தா திட்டம் என்பது " அளவில்லா உணவு மற்றும் கல்வியை குழந்தைகளுக்கு வழங்குதல். எங்களுடைய நோக்கம் இந்தியாவின் பசி என்ற சங்கிலியை உடைத்து எறிவதே. பசி என்ற வார்த்தையை அகற்றி எல்லாருக்கும் ஒரு வேளை உணவாவது கிடைக்க செய்வதே.

குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கி ஆரோக்கியமான உணவையும், எதிர்கால கல்வியையும் அவர்களுக்கு அளித்து ஒரு சாலச் சிறந்த எதிர்கால இந்தியாவை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் .

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X