சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் #ThankYouMK

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் #ThankYouMKS என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Recommended Video

    மருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்!

    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.

    #ThankYouMKS trending after 27 % reservation announced in medical seats by centre

    தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இந்த மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன. இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இவ்வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

    27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 1500 ஓபிசி மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2500 ஓபிசி மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்! மருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்!

    இந்த தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நாட்டின் சமூக நீதிக்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கவும் இந்த முடிவு பெரிதும் உதவும் என்று பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக திமுக எம்பி வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவினர் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் #ThankYouMKS என்று ஹேஸ்டேக் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    The Central Government has decided to provide 27 per cent reservation in the current year for other backward classes in the All India quota for admission to medical courses. The hashtag #ThankYouMKS has become a trend on Twitter as the announcement has been welcomed by many.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X