சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்

By Siam
Google Oneindia Tamil News

சென்னை: தந்தை பெரியார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக ரஜினிகாந்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முறைப்படி தாக்கல் செய்யுமாறும் மனுதாரருக்கு நீதிபதி ராஜமாணிக்கம் அறிவுறுத்தியதால் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டது திராவிடர் விடுதலைக் கழகம்,

சென்னையில் கடந்த ஜனவரி 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமர், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

Thanthai Periyar a great leader: Madras High Court Justice Rajamanickam

ஆனால் பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ் புகார் அளித்திருந்தார்

மெடிக்கல் மிராக்கிள்.. 3000 வருடம் முன்பு இறந்தவர், அதே குரலில் பேசினார்.. பேச வைத்தனர்.. அசத்தல்மெடிக்கல் மிராக்கிள்.. 3000 வருடம் முன்பு இறந்தவர், அதே குரலில் பேசினார்.. பேச வைத்தனர்.. அசத்தல்

அதேபோல சென்னையை சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி ராஜமாணிக்கம், தந்தை பெரியார் என்பவர் மிகப்பெரிய தலைவர் என்று கருத்து தெரிவித்தார் மேலும் புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

English summary
Madras High Court Justice Rajamanickam has praised as Thanthai Periyar was a great leader in the case against Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X