சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக-அதிமுக வெல்லக்கூடிய தொகுதிகள் பட்டியல்.... இழுபறி தொகுதிகள் எவை... தந்திடிவி கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanthi TV Exit polls : செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடந்து முடிந்த 39 மக்களவை தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை திமுக -அதிமுக பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது பற்றியும், இழுபறி உள்ள தொகுதிகள் பட்டியலையும் தந்தி டிவி கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளது.

    இறுதிகட்ட மக்களவை தேர்தல் நேற்று முடிந்த நிலையில் நேற்று மாலை தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வரிசையாக வெளியிட்டன.

    எல்லா ஊடகங்களுமே பாஜக அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. மாநில கட்சிகளும் குறிப்பிட்ட அளவு வெற்றி பெறும் என தெரிவித்தன.

    ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல்.. பாஜக 315 இடங்கள், காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என கணிப்பு ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல்.. பாஜக 315 இடங்கள், காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என கணிப்பு

    தமிழக ஊடகங்கள்

    தமிழக ஊடகங்கள்

    இதேபோல் தமிழகத்தில் வேலூர் தவிர (தேர்தல் நடக்கவில்லை) 38 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை திமுக கூட்டணியே கைப்பற்றும் என கணித்துள்ளன. புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு உள்பட தமிழக ஊடகங்களும் திமுக கூட்டணியே தமிழகத்தில் அதிக இடங்களில் வெல்லும் என தெரிவித்தன.

    12 ஆயிரம் பேரிடம் கேள்வி

    12 ஆயிரம் பேரிடம் கேள்வி

    இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 11 ஆயிரத்து 700பேரிடம் கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளதாக கூறியுள்ள தந்திடிவி, 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அதன் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

    திமுக தொகுதிகள்

    திமுக தொகுதிகள்

    அதன்படி திமுக கூட்டணிக்கு 19 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தந்திடிவி கூறியுள்ளது.அவற்றின் விவரம் பின்வருமாறு: மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை. கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி.

    அதிமுக தொகுதிகள்

    அதிமுக தொகுதிகள்

    அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 5இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி, திருப்பூர்

    இழுபறி தொகுதிகள்

    இழுபறி தொகுதிகள்

    திமுக,அதிமுக இடையே இழுபறி உள்ளதாக 14 தொகுதிகளின் பட்டியலையும் தந்திடிவி வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு, கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென் சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி.

    English summary
    thanthi tv released exit poll result 2019: aiamdk may get 5 seats in tamil nadu lok sabha elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X