சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்- வீடியோ

    சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 144 பேர் முதல் முறையாக வாக்களித்தனர்.

    இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுபாக நடந்து வருகிறது. வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன. வாக்களிப்பதற்காக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

    The 144 peoples casting vote For the first time In Kilpauk hospital

    இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். சிறுவயதிலேயே கொத்தடிமையாக சிக்கிக் கொண்டதால், கன்னியப்பன் வாக்களித்ததே இல்லை. அண்மையில், கன்னியப்பனை கொத்தடிமைப் பிடியில் இருந்து மாவட்ட நிர்வாகம் மீட்டது. இந்தநிலையில், முதன்முறையாக, மருதாடு கிராமத்தில் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருடன் வாக்களித்தார்.

    முதியவர் கன்னியப்பனிடம் அரசியல் தலைவர்கள் குறித்து கேட்ட போது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைத் தெரிகிறது. ஆனால் தற்போது யார் முதல்வர் என்பது தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

    மக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக மக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக

    தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில், திருமணம் முடிந்த கையோடு வந்து ஜோடிகள் வாக்களித்துள்ளனர். அதே போன்று, சென்னை பூந்தமல்லியில் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், ஆம்புலன்சில் வந்து வாக்களித்தார்.

    இந்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 159 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது இதுவே முதன் முறை என்றும், சிகிச்சை பெறும் 159 பேரும் வாக்களிக்கும் வகையில் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்த அதிகாரிகள், அதில், 144 பேர் முதன் முதலாக வாக்களித்துள்ளனர் என்றனர்.

    English summary
    Lok sabha elections 2019: The 144 peoples vote the first time In Kilpauk hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X