சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?!

இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை கொண்டு வர முயல்வதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!-வீடியோ

    சென்னை: அடுத்தடுத்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது பாஜக அரசு. "ஒன்னு நீ ஆளணும்.. இல்லை நான் ஆளணும்.. நமக்கு நடுவுல யாருமே வரக்கூடாது".. என்ற ரீதியில் காங்கிரஸை துணைக்கு அழைத்து... இரு கட்சி ஆட்சி முறையை பாஜக கொண்டு வந்துவிடுமோ என்ற கலக்கம் நமக்கு ஏற்பட துவங்கி உள்ளது. காரணம் அமித்ஷாவின் இன்றைய பேச்சு.

    ஒரு கட்சி முறை என்றால், ஆளும் கட்சி ஒன்று மட்டுமே இருக்கும். எதிர்கட்சிகள் எல்லாம் செயல்பட அனுமதியே இருக்காது. இதற்கு உதாரணம், முன்னாள் சோவியத் யூனியன் ரஷ்யாவை சொல்லலாம்.

    அதேபோல, இரு கட்சி ஆட்சி முறை என்றால், 2 பெரிய கட்சிகள் மட்டும்தான் செயல்படும். அதற்கு உதாரணமாக அமெரிக்காவை சொல்லலாம். ஆனால், பல கட்சி ஆட்சி ஜனநாயக முறைக்கு பெயர் பெற்றது இந்தியா. நம் நாட்டின் பன்முகத்தன்மைதான் இந்த பல அரசியல் கட்சிகளை உருவாக்கும் நாடாக மாற்றியது.

    பிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சிபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி

    பாஜக

    பாஜக

    அது மட்டுமில்லை.. உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சி என்ற பெருமையை பெற்றதுதான் இந்தியா! இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சியமைக்கலாம். ஆனால் தற்போது இதற்கு முடிவு கட்ட பாஜக திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை அமித் ஷாவின் பேச்சு கிளப்பியுள்ளது.

    ஒரிஜினல் முகம்

    ஒரிஜினல் முகம்

    முதன்முறையாக மோடி பிரதமர் ஆனபோது இருந்த வீரியத்தைவிட, இப்போது அதன் தாக்கம் அதிகமாக வெளிப்படுகிறது.. பாஜகவின் ஒரிஜினல் முகம் பல சூழல்களில் வெளிப்பட்டு நம் முன்னால் நிற்கிறது. இதற்கு உதாரணமாக, காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை சொல்லலாம், அடுத்ததாக புதிய கல்விக் கொள்கை விவகாரத்தை சொல்லலாம். இந்த 2 பெரிய விவகாரங்களுக்கு இன்னும் ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில், அமுங்கி அமுங்கி சொல்லி கொண்டிருந்த "ஒரே நாடு ஒரே மொழி" கொள்கை சத்தத்துடன் பகிரங்கமாகவே வெடித்து கிளம்பி உள்ளது.

    பேச்சின் தன்மை

    பேச்சின் தன்மை

    பல கட்சி ஜனநாயக நாடாளுமன்ற முறை தோல்வி அடைந்து விட்டதாக அவர் பேசியுள்ளார். எத்தனை கட்சி இந்தியாவில் இருந்தால் எங்களுக்கென்ன.. அவ்வளவும் வேஸ்ட்தான் என்பதுபோல உள்ளது அவரது பேச்சின் தன்மை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் உள்ளது போலவே 2 கட்சி முறைக்கு பாஜக அடி கோலுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. "எங்களுக்கு மாற்று பாஜக, காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக" என்பதைதான் பாஜக முன்னிறுத்தப் போகிறதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    அமித்ஷா

    அமித்ஷா

    அப்படி ஒருவேளை இரு கட்சி ஆட்சி முறை வந்துவிட்டால் நிலைமை என்னாகும்? நாடு முழுவதும் இந்த இரு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படும். நாடாளுமன்றமோ, சட்டசபையோ இந்த இரு கட்சிகள் மட்டுமே இருக்குமாறு சட்டமும்கூட கொண்டு வந்து விடலாம். இதைத்தான் அமித்ஷா மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.

    பிராந்திய கட்சி

    பிராந்திய கட்சி

    அப்படியே அமெரிக்கா போல இரு கட்சி ஆட்சி முறையே இங்கேயும் வந்துவிட்டால், இது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் பிராந்தியக் கட்சிகளின் கையே தற்போது ஓங்கியுள்ளது. பல மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகள்தான் வலுவாக உள்ளன. இவர்களைத் தாண்டி தேசியக் கட்சிகளால் வர முடியாத, தலையெடுக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் பாஜகவின் கண்ணை உறுத்துகிறதா என்றும் தெரியவில்லை.

    ஜனநாயகம்?

    ஜனநாயகம்?

    "பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக என இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான முயற்சி நடப்பதாகவும், அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும்" கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஏற்கனவே சொல்லியதை இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டி உள்ளது.

    சீமான்

    சீமான்

    அதேபோல, "காங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும்; இரு கட்சிகளும் ஒன்று தான்" என்று சீமான் அடிக்கடி சொல்லி வந்தது கூட நியாயம்தானோ என்பதும் நம் எண்ணத்துக்கு இப்போது வந்து போகிறது. ஆக மொத்தம்.. கூவி கூவி கூப்பாடு போட்டாலும் தாமரையே மலராத பட்சத்தில்.. இரு கட்சி ஆட்சி என்பதைக் கொண்டு வந்தா.. கை இல்லாட்டி தாமரை என்ற அளவில் நாட்டை மேலும் சுருக்க பாஜக திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி உரத்து எழுந்துள்ளது.

    English summary
    Like the US, the BJP government seems to be seeking a two-party system in India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X