சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: அமைதிபூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சிக்கிறது சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார்.

Recommended Video

    The BJP is taking a different direction in a peaceful India: Khushboo

    இதுகுறித்து, இன்று, சென்னை விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி:

    The BJP is taking a different direction in a peaceful India: Khushboo

    குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் மக்களை அழைத்துப் பேசவும் மத்திய அரசு தயாராக இல்லை. டெல்லியில் பெரும் கலவரம் நடந்துக் கொண்டு இருக்கும் போது டிரம்ப் வந்ததால் கவனிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். உள்துறை அமைச்சர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது.

    இன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்!இன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்!

    என்.ஆர்.சி. பற்றி பேசவே இல்லை என்று பிரதமர் கூறுகின்றார். ஆனால் நாடு முழுவதும் என்.ஆர்.சி. கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். பிரதமர்- உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் யார் பொய் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. மக்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க வில்லை.

    ஜனநாயக நாட்டில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அரசியல்வாதி என்பது மக்களுக்கு சேவை செய்ய கூடியவர் என்று அர்த்தம். பின்னர் ஏன் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

    நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை பயமுறுத்த தொடங்கி உள்ளனர். பா.ஜ.க. தலைவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக பேசி உள்ளனர். பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரமாக பேசிய பா.ஜ.க. தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை. டெல்லி போலீஸ் என்ன செய்துக் கொண்டு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளராக இருப்பதால் தட்டி கேட்க கூடாது என்ற நிலை நிலவுகிறது.

    நாடு எந்த திசையில் போகிறது? எந்த திசையில் போக உள்ளது என்பதை பார்க்கும் போது பயமாக உள்ளது. நாடு அமைதி பூங்கா இருந்தது. தற்போது பிரச்சனைகள் தொடங்கி உள்ளதை பார்த்தால் நாளை எங்கே போய் முடியும் என்ற பயம் ஏற்படுகிறது.

    மக்கள் மத்தியில் விஷத்தை விதைக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். அமைதிபூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் ஏன் கொண்டு செல்ல நினைக்கிறீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி கேள்வி கேட்டு மக்கள் போராடுகின்றனர். பதில் சொல்ல தெரியததால் பதிலளிக்க மறுக்கின்றனர். இதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பா.ஜ.க. நினைப்பது தான் மக்களிடம் ஊடகம் முலமாக செல்ல வேண்டும் என்று செயல்படுகிறது. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    English summary
    The BJP is taking a different direction in a peaceful India, All India Congress party spokesperson Khushboo gave an interview at Chennai airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X