• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஒ.பி.எஸ் தான்.. அவர் நடத்திய தர்மயுத்தம் தான்.. ஜெ.தீபா பரபர பேட்டி

|

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறினார்.

சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், "உயர் நீதிமன்றத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணை க்கு வந்தது, நினைவிடமாக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது அதற்கு தடைக்கோரி வழக்கு தொடுத்தேன்.

கடந்த ஆண்டு நடந்த வழக்கில், ஒரு வேலை உங்களுக்கு சொத்து கிடைத்தால் அறக்கட்டளை நடத்துவீர்களா என்று கேட்டார்கள் நானும் சம்மதித்தேன். நீதிபதிகள் வாய்மொழியாக தீபா, தீபக் எப்போது வந்தாலும் போயஸ் தோட்ட இல்லத்தில் அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்கள்.

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவுசென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவு

அத்தையுடன் பேசினேன்

அத்தையுடன் பேசினேன்

என்னுடைய கோரிக்கை என்னவென்றால் என்ன கணக்கு வழக்கு என்பதை எங்களுக்கு கிடைக்கவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் நான் போயஸ்கார்டன் செல்லவில்லை என்று அரசு தரப்பில். கூறுகிறார்கள். நான் பிறந்தது போயஸ்கார்டனில் தான் நான் பிறந்தேன் வளர்ந்தேன் சில குடும்ப சூழல் காரணமாக பின் நாங்கள் அங்கிருந்து வெளியே சென்று தங்கினோம். ஜெயலலிதா இரு முறை சிறை சென்றார் அப்போது நான் அவரை நேரில் சென்று சந்தித்தேன். 2014ல் சிறையிலிருந்த போது பூங்குன்றன் என்னை தொலைபேசியில் அழைத்தார் ஜெயலலிதா வரச்சொல்லி தான் அவர் அழைத்தார் நாங்களும் சென்றோம். எங்களிடம் நீண்ட நேரம் பேசினார்.

அசிங்கப்படுத்தினார்

அசிங்கப்படுத்தினார்

எங்களை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் சசிகலா குடும்பம் செய்தது, எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது, அவர்கள் ஜெயலலிதாவிற்கு கெடுதல் செய்கிறார்கள் என நான் நினைத்தேன்.என்னுடைய அத்தை ஜெயலலிதா விரும்பாததால் போயஸ் தோட்ட இல்லத்தில் என்னை அனுமதிக்காமல் இல்லை. ஆனால் சசிகலா குடும்பம் தான் என்னை தடுத்தது , ஒரு காலகட்டத்தில் அவர்கள் குடும்பத்தையே ஒவ்வொருவராக ஜெயலலிதா வெளியேற்றினார். வெளி உலகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் தனிமைப்படுத்தினர். சசிகலா குடும்பத்தால் பலமுறை நான் அசிங்கப்படுத்தப்பட்டது யாருக்கும் தெரியாது. போயஸ் தோட்ட இல்லம் இது எங்கள் உடமையல்ல உரிமை, நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. தமிழ்நாட்டிலிருந்து தமிழக அரசை எதிர்த்து என்ன செய்யமுடியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

தர்ம யுத்தம்

தர்ம யுத்தம்

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். அவர் தர்மயுத்தம் செய்தது அரசியல் நோக்கத்திற்கு தான். போயஸ் கார்டன் இல்ல விவகாரத்தில் தெய்வத்தையும் , ஜெயலலிதா ஆன்மாவையும் நம்பி தான் இருக்கின்றேன். சசிகலா குடும்பத்தை சேர்க்கமாட்டோம் என்றார்கள் ஆனால் ஒவ்வொன்றாக பின்வாங்குகிறார்கள் இப்போது சேர்த்தாலும் சேர்ப்போம் என்கிறார்கள். சசிகலா வெளியே வருவதால் என்ன மாறுதல் ஏற்படும் என்றால் எனக்கு தெரியாது. ஒருவேளை அதிமுகவில் இணைத்து கொண்டால் மாறுதல் ஏற்படலாம்.

ஜெயலலிதா இறப்பு

ஜெயலலிதா இறப்பு

ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இப்போது இவர்களுக்கு தேவையில்லை. நினைவிடம் அமைப்பது தான் முக்கியம். வாக்கு வாங்குவதற்காக தேர்தல் நேரத்தில் மீண்டும் இதை பற்றி பேசினாலும் பேசுவார்கள். ஜெயலலிதா விற்கு உண்மையாக இருந்தால் அவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா இல்லையா என்பதை தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செய்யயுள்ளது..

விலக ஒபிஎஸ் காரணமில்லை

விலக ஒபிஎஸ் காரணமில்லை

அரசியல் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கின்றேன். அரசியலை நான் விரும்பவில்லை கட்சியினர் கட்டாயப்படுத்தினர் அரசியலில் நாம் அனாவசியமாக வந்ததற்கு காரணம் ஒ.பி.எஸ் தான். அரசியலில் இருந்து நான் விலக அவர் காரணமல்ல." இவ்வாறு கூறினார்.

  பிளஸ் 2 மாணவர்களே! நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு! சொல்கிறார் டாக்டர் தீபா
  English summary
  It was dharma yutham waged by O. Panneerselvam that gave everyone a headache. The cause of all the problems is of O. Panneerselvam. Said J. Deepa.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X