சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

குற்றவாளிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களை இரக்கமும் இன்றி தண்டிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு க

Google Oneindia Tamil News

சென்னை: சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களை இரக்கமும் இன்றி தண்டிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். நீதியை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். குழந்தைக்கு எங்கள் ஆதரவு தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

The child needs our support Khushbu post twitter page

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சகிதா பானுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமாருடன் சேர்ந்து சகிதா பானு, வேலை வாங்கி தருவதாகக் கூறி, பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

புகாரளிக்கப்பட்ட 13 வயது சிறுமியை கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மதன்குமாரின் தாயார் செல்வி, அவரது தங்கை சத்தியா மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 12 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்

சந்தியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என கூறியிருந்தார். அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யதாக தெரிவித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பயங்கரமானது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகள், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களை இரக்கமும் இன்றி தண்டிக்க வேண்டும். நீதியை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். குழந்தைக்கு எங்கள் ஆதரவு தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Khushbu post her twitter page, This is horrifying. The case should be investigated n the culprits, irrespective of which party they belong to, what position they hold, which department he works for, must be punished without any mercy.Justice should be delivered without any delay.The child needs our support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X