சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இ.வி.எம் மெஷின் அறை.. வேகமாக அருகில் வந்த லாரி.. திரண்ட கட்சியினர்.. பரபரப்பான லயோலா கல்லூரி!

Google Oneindia Tamil News

சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள் லாரி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பள்ளிகளில் கொண்டு சென்று வைக்கப்பட்டன.

அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா.. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா.. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் தேர்தல்

தமிழகத்தில் தேர்தல்

அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்தல்

தமிழகத்தில் தேர்தல்

அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

லாரி வந்ததால் பரபரப்பு

லாரி வந்ததால் பரபரப்பு

இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் கழிவறை வசதி கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள்ளும் கழிவறை வசதி கொண்ட ஒரு லாரி கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடிய முகவர்கள்

கூடிய முகவர்கள்

லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் வருகை தந்திருந்த பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொன்னுசாமி அந்த கழிவறை வசதி கொண்ட லாரியை ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க கட்சியின் முகவர்கள் பெருந்திரளாக அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தேகம் எழுந்துள்ளது

சந்தேகம் எழுந்துள்ளது

லயோலா கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க கழிவறை வசதி கொண்ட புதிதாக கண்டெய்னர் லாரி கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும், பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. பரபரப்பு நிலவியதால் லயோலா கல்லூரி வளாக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
The commotion was caused by a lorry entering the Loyola College campus in Chennai where the voting machines are kept
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X