சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள்.. நெடுமாறன் புத்தகத்தை அழிக்க ஹைகோர்ட் உத்தரவு

பழ.நெடுமாறனின் ஈழம் சிவக்கிறது புத்தகம் அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இறையாண்மைக்கு எதிரான நெடுமாறனின் கருத்துக்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    சென்னை: பழ.நெடுமாறன் எழுதிய "ஈழம் சிவக்கிறது" என்ற புத்தகத்தை உடனடியாக அழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002-ம் ஆண்டு "ஈழம் சிவக்கிறது" என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். ஆனால் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக கூறப்பட்டு, அந்த புத்தகத்தின் பிரதிகளும் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டன.

    The Court Ordered to destroy the books Eezham Sivakirathu written- by Pazha Nedumaran

    அத்துடன் புத்தகத்தை வெளியிட்டதற்காக க்யூ பிரிவு போலீசாரால் பழ.நெடுமாறனை கைது செய்தனர். பிறகு 2006-ம் ஆண்டு பழ.நெடுமாறன் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் புத்தகத்தை அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்தும், மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகத்தை தன்னிடமே தரவேண்டும் என்று கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றையும் போட்டிருந்தார்.

    [அனல் பறக்கும் இலங்கை அரசியல்.. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. கவிழ்ந்தது ராஜபக்சே அரசு]

    இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதி முரளிதரன் உத்தரவிடுகையில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பழ.நெடுமாறனின் புத்தகங்களை உடனடியாக அழிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடுவதாக அறிவித்தார்.

    English summary
    The Court Ordered to destroy the books Eezham Sivakirathu written- by Pazha Nedumaran
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X