சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடு - நீந்தி கரை சேர்ந்து தப்பியது

குன்றத்தூர் அருகே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாடு அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பியது.

Google Oneindia Tamil News

சென்னை: அடையாறு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாடு ஒன்று சாமர்த்தியமாக நீந்தி கரையேறியது. இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

    அடையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடு - நீந்தி கரை சேர்ந்து தப்பியது - வீடியோ

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தற்போது குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை காவனூர் பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மேய்ச்சலுக்காக வந்த மாடு ஒன்று வெள்ள நீரில் சிக்கியது. தப்பி செல்வதற்கு வழி தெரியாமல் வெள்ள நீரின் நடுவே நின்று கொண்டு தவித்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு - ஏரியின் நீர்மட்டம் 22 அடிசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு - ஏரியின் நீர்மட்டம் 22 அடி

    The cow that was swept away in the Adyar flood

    மாட்டின் உரிமையாளர்களும் அங்கு பாதுகாப்பு பனியில் இருந்த போலீசார் சிலர் அங்கிருந்து குரல் கொடுத்ததையடுத்து லாவகமாக கரையை நோக்கி வந்தது அப்போது அந்த இடத்தில் சாலை முற்றிலும் அரித்து செல்லப்பட்டதால் அந்த பள்ளத்தில் விழுந்து சிறிது தூரம் வரை வெள்ள நீரில் மாடு அடித்து செல்லப்பட்டது.

    The cow that was swept away in the Adyar flood

    வெள்ளத்தில் சமாளித்து நீந்திய மாடு லாவகமாக சிறிது தூரம் நீந்தியபடி சென்று கரை சேர்ந்தது பின்னர் அங்கிருந்த போலீசார் அந்த மாட்டை பாதுகாப்பாக கரைக்கு செல்லும்படி விரட்டிவிட்டனர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாடு லாவகமாக நீந்தி கரை சேர்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    English summary
    Adayaru flood One of the cows, which was swept away in the floodwaters, swam to shore. This video is currently going viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X