சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஹேக்கிங் நடைபெற்றதாகவும் அங்கு சைபர் தாக்குதல் நடந்துள்ளது என்றும் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் புகார்களும், செய்திகளும் வெளியாகியது. மேலும் பல முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

 The cyber attack on NPCIL facilities is shocking and reveals the lack of adequate safety measures: says mk stalin

இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அணு மின்சாரக் கழக கம்ப்யூட்டரில் தீங்கு ஏற்படுத்தும் வைரஸ் இருந்தது உண்மை. ஆனால் கணிணிகள் பாதிக்கப்படவில்லை. ஒரு கணினியில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக இந்தியாவின் சைபர் புகார்களை கவனிக்கும் அரசு அமைப்பான Computer emergency response team இடம் தெரிவிக்கப்பட்டது.

வைரஸ் தாக்கப்பட்ட கணினி ஒன்றை பணியாளர் ஒருவர் அலுவலக நெட்வொர்க் உடன் இணைத்துள்ளார். அதனால் அலுவலக நெட்வொர்க்கில் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் அலுவலகத்தின் கிரிட்டிக்கள் நெட்வொர்க் எதுவும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கும் அரசு மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால்.. அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கைநாளைக்கும் அரசு மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால்.. அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் " NPCIL (கூடங்குளம் அணுமின்நிலையம்) மீதான சைபர் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு வசதிகளின் தயார்நிலை குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
dmk leader mk stalin on twitter: The cyber attack on NPCIL facilities is shocking and reveals the lack of adequate safety measures. The Union Government must conduct a thorough enquiry into the lapses. The National Cyber Security Coordinator owes an explanation on the preparedness of such facilities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X