சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

75 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்று.. கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Google Oneindia Tamil News

சென்னை: மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை வீசிய புயல் காற்றுடன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்று காலை காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.

கடந்த 9-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 9-ந்தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

வங்க கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள் இதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்

புயல் கரையை கடக்கும்

புயல் கரையை கடக்கும்

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே இன்று கரையைக் கடந்துள்ளது. கரையை புயல் கடந்த போது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் முதல் 75 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியது. அத்துடன் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 அதிகபட்ச மழை

அதிகபட்ச மழை

இதன் காரணமாக ஸ்ரீககுளம், விஜயநகரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரம், பெரியாறு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் 30மிமீ மழை பெய்தது. சின்ன கல்லார், காஞ்சிபுரம், உத்தரமேரூர் சோளிங்கர் 20 மிமீ மழை பெய்தது.

எங்கெல்லாம் மழை

எங்கெல்லாம் மழை

இதனிடையே வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் வளி மண்டலமேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா கடலோரப் பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.. இடையிடையே சில நேரங்களில் மணிக்கு 75 கிமீ வேகத்திலும் வீசியது.. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசியது. இதனால் இந்த இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் இருப்பதை காட்டும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் சென்னை எண்ணூர், கடலூர், உள்ளிட்ட துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்தன.

English summary
the deep depression to move in the western and northwest direction and its landfall south of Kakinada on the coasts of Andhra Pradesh may occur in the morning of 13 October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X