• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அச்சச்சோ".. தம்பி, என்னப்பா லிஸ்ட்டில் பேரே இல்லையாமே".. பதறி போய் ஸ்டாலினுக்கு போனை போட்ட சீனியர்!

|

சென்னை: அச்சச்சோ... திமுக ரெடி பண்ணும் லிஸ்ட்டில் அவர் பெயரை காணோமாமே.. இதை கேட்டு அந்த சீனியர் செம டென்ஷன் ஆகிவிட்டாராம்.. இப்படி ஒரு பேச்சுதான் அறிவாலய வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எப்படியும் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பு பலமாகி விட்டது.. அதற்கேற்றபடி திமுக தலைமையும் அடுத்து யார் யாருக்கு அமைச்சர் பதவி தரலாம், யார் யாரை அதிகாரிகளாக நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் கடந்த சில தினங்களாகவே ஈடுபட்டு வந்ததாக செய்திகள் வந்தன.

பிறகு, இது சம்பந்தமான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும், அமைச்சர்கள் பட்டியல் தயார் என்றும் அடுத்த செய்திகள் வந்தன..

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இந்த லிஸ்ட்டில் சில முக்கிய நபர்களான செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதைதவிர தற்போது மேலும் சில தகவல்களும் வெளியாகி உள்ளது.. கடந்தமுறை திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த சீனியர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.. ஆனால், அவர்களுக்கான துறைகள் மட்டும் மாற்றப்படுமாம்.. அதேபோல, புது முகங்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

 31 பேர் லிஸ்ட்

31 பேர் லிஸ்ட்

இதைதவிர, அதிமுகவில் இருந்து வந்தவர்கள், தான் போட்டியிட்ட தொகுதி மட்டுமல்லாமல், மற்ற தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தருவதற்கு தலைமை யோசித்து வருகிறதாம். இதனால், 10 வருடமாக கட்சிக்கு உழைத்தவர்கள், சீனியர்கள், விசுவாசிகள் அறிவாலயத்தை வட்டமடித்து வருவதையும் காண முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், 31 பேர் கொண்ட லிஸ்ட் ரெடியாகி உள்ளது..

 என்னாச்சு?

என்னாச்சு?

ஆனால், இதுகுறித்து இன்னொரு செய்தியும் கசிந்து வருகிறது.. அதில் கட்சியில் இப்போதைய சீனியர், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரையே காணோமாம்.. தன் பெயர் இல்லாமலேயே லிஸ்ட் ரெடியானதை கேள்விப்பட்டு துரைமுருகன் டென்ஷன் ஆகிவிட்டாராம்.. உடனடியாக ஸ்டாலினுக்கு போனை போட்டு, "தம்பி, என்னப்பா என் பேரை காணோமே" என்று கேட்டுள்ளார்.. அதற்கு ஸ்டாலினோ, அண்ணே.. நீங்க இல்லாமலா? உங்களுக்கு மிக முக்கிய பதவி காத்துக்கிட்டு இருக்கு" என்று சொன்னாராம்.

 சபாநாயகர்?

சபாநாயகர்?

ஆனாலும், துரைமுருகன் மனம் ஏற்கவில்லையாம்.. அது என்ன பதவியாக இருக்கும்? ஒருவேளை சபாநாயகர் பதவியா? அப்படி பதவி தந்து தன்னை உட்கார வைத்துவிடுவார்களோ என்றுகலங்கி போய் சொல்லி வருகிறாராம்.. இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும் இதுகுறித்து நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்..

அதிருப்தி

அதிருப்தி

அவர்கள் சொன்னதாவது: "துரைமுருகனுக்கு சீட் தரும்போதே பல வித அதிருப்திகள் தொகுதிக்குள் எழுந்தது.. 10 முறை போட்டியிட்ட பிறகும், மறுபடியும் இவருக்கு சீட் தர வேண்டுமா? அதற்கு பதிலாக இளைஞர்களுக்கும், கட்சிக்காக பலவருடமாக உழைத்து கொண்டிருப்பவர்களுக்கும் சீட் தரலாமே என்ற முணுமுணுப்புகள் ஏற்கனவே எழுந்தபடியே இருக்கின்றன.

 சீனியர்

சீனியர்

துரைமுருகன் சீனியர்தான்.. அவருக்கு தெரியாத விஷயமே இல்லை.. எல்லாமே விரல்நுனியில் வைத்திருந்தாலும், வயது மூப்பு, அடிக்கடி உடல்நலக்குறைவு போன்ற காரணங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்.. அதனால், முன்புபோல அவரால் கள வேலைகளை செய்ய முடியுமா என்ற ஐயமும் திமுக தரப்பில் உள்ளது.. அதேசமயம், இவரை போன்ற சீனியர்கள் கட்சிக்கு தேவை என்பதையும், தலைமை உணராமல் இல்லை.. அந்த வகையில், மிக முக்கிய பதவி அவருக்கு தந்தாலும் வியப்பில்லை" என்றனர்.

 
 
 
English summary
The DMK is said to be preparing a list of ministers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X