• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"... ஆகிய நான்".. நாள் குறிச்சாச்சாமே.. இடமும் ரெடி பண்ணிட்டாங்களாம்.. றெக்கை கட்டி பறக்கும் தகவல்

|

சென்னை: "நாள் குறிச்சிட்டாங்களாம்.. இடமும் தேர்வு செய்துட்டாங்களாம்".. திமுக தரப்பின் செய்திகள் இப்படி தினம் தினம் மக்களை பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ளாக்கி வருகிறது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி நமக்கு தேர்தல் நடந்து முடிந்தது... தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்புகள் அனைத்துமே சொல்லிவைத்தாற்போல ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று அறுதியிட்டு கூறின.

தேர்தல் அன்றைய வாக்குப்பதிவு சதவீத கணக்குகளும் இதையேதான் சொல்லின.. இதனால் திமுகவின் அடிமட்டதொண்டர்களிலிருந்து அறிவாலயம் வரை அனைவரும் செம குஷியுடன் உள்ளார்கள்.

மாலத்தீவும் இல்லை-கொடைக்கானலுக்கு புறப்பட்ட மு.க.ஸ்டாலின்... தனி விமானத்தில் குடும்பத்துடன் பயணம் !மாலத்தீவும் இல்லை-கொடைக்கானலுக்கு புறப்பட்ட மு.க.ஸ்டாலின்... தனி விமானத்தில் குடும்பத்துடன் பயணம் !

 ரிப்போர்ட்கள்

ரிப்போர்ட்கள்

அதேபோல, தேர்தலுக்கு பிறகு ஐபேக் நடத்திய கள ஆய்வின்படி திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்ற ரிப்போர்ட்கள் தலைமைக்கு கிடைத்துள்ளன. இதனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் அறிவாலயம் வரை ஏக குஷியில் தென்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10 நாளைக்கு முன்பிருந்தே, அதிகாரிகள் லிஸ்ட் ஒன்று ரெடியானதாக சொன்னார்கள்.. அடுத்து திமுகவே ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், இந்த அரசு உயர் அதிகாரிகள் லிஸ்ட் தயாரானது..

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அதற்கேற்றபடி, சில அதிகாரிகளும் ஸ்டாலினுக்கு போன் செய்து வாழ்த்துக்களை சொல்லி வருவதாகவும் செய்திகள் கசிந்தன. இதற்கு அடுத்தபடியாக, அதாவது இந்த ஒரு வாரமாக அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகி கொண்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. 31 பேர் கொண்ட லிஸ்ட் தயாராகி விட்டதாகவும், அதில் யார் யார் அமைச்சர்கள் என்று பெயர் வாரியாகவும் ஒரு டம்மி லிஸ்ட் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. உத்தேச அமைச்சர்கள் லிஸ்ட் என்று இதற்கு ஒரு பெயரும் வைத்துள்ளனர்.

 வெளிநாடு

வெளிநாடு

இதையடுத்து, ஸ்டாலின் ஆட்சி அமைக்க தயாராவதால், அதற்கு முன்பு சற்று ஓய்வெடுத்தால் நன்றாக இருக்குமே என்ற பேச்சுக்களும் ஓடி கொண்டிருக்கிறதாம்.. ஸ்டாலினுக்கு, லண்டனுக்கு போவதாக ஏற்கனவே ஒரு பிளான் இருந்தது.. ஆனால், இப்போது தொற்று அதிகமாக இருப்பதால், ஓய்வுக்காக மாலத்தீவுக்கு செல்லுங்கள் என்று குடும்பத்தினர் அறிவுறுத்தி வருகிறார்களாம்.

ரிசல்ட்

ரிசல்ட்

இப்போது இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. ஆட்சி அமைக்க நாளே குறிக்கப்பட்டு விட்டதாம்.. மே 2-ம் தேதி ரிசல்ட் வரப்போகிறது.. எப்படியும் திமுகதான் அரியணை ஏறப்போகிறது என்பதால், பதவியேற்பதற்கான ஆயத்தங்களை தயார் ஆகி வருகிறதாம்.. அதன்படி மே 6ம் தேதி நாள் குறித்துள்ளனர்.. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்தான், புதிய திமுக அரசு பதவியேற்பதற்கான விழா நடக்க போகிறதாம்.. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

 பொறுப்பு

பொறுப்பு

இன்னொன்றும் சொல்கிறார்கள், முதல்வரான பிறகு, ஸ்டாலின் வேறு இடத்தில் வசிக்க நேரிடலாம் என்கிறார்கள்.. இப்போது, சித்தரஞ்சன் சாலை ரோட்டில்தான் வீடு இருக்கிறது.. பொறுப்புக்கு வந்தபிறகு, அமைச்சர்கள் குடியிருப்பு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் பங்களாக்களில் ஒன்றில், ஸ்டாலின் குடியேறலாம் என்றும் ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.

  கொடைக்கானலில் முகாமிட்டுள்ள MK Stalin.. அடுத்தகட்ட வியூகம் குறித்து ஆலோசனை
   ஓவர் கான்பிடன்ஸ்?

  ஓவர் கான்பிடன்ஸ்?

  இன்னும் ரிசல்ட்வே வரவில்லை.. அப்படியே வந்தாலும் மெஜாரிட்டி யார் என்று தெரியவில்லை.. அப்படியே மெஜாரிட்டி வந்தாலும், இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸா? அல்லது தன்னம்பிக்கையின் வெளிப்பாடா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

  English summary
  The DMK is said to be preparing to form a New Government
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X