• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிரபல ஹோட்டல் பாத்ரூமில் பெண்களை வீடியோ எடுத்த காமுகன் சிக்கினான்.. திமுக நிர்வாகி அதிரடி..!

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல ஓட்டலின் பாத்ரூமில் செல்போன் கேமராவை வைத்து திருட்டு தனமாக வீடியோ எடுத்த இளைஞரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.. திமுக பிரமுகர் மேற்கொண்ட அதிரடி காரணமாகவே இளைஞரின் இந்த பகீர் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..!

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாரதி... மதுரவாயில் திமுக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்... நடக்க போகும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று காலை நேர்காணலுக்கு வந்திருக்கிறார்..

பிறகு நேர்காணலை முடித்து கொண்டுவிட்டு, கிண்டி ரயில்வே ஸ்டேஷன் நிலையத்திற்கு அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிக்கு மதியம் சாப்பிட வந்தார்..

நாடு முழுவதும் இன்று முதல் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்நாடு முழுவதும் இன்று முதல் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

 பிரபல ஓட்டல்

பிரபல ஓட்டல்

அப்போது ஹோட்டலுக்கு உள்ளே உள்ள பாத்ரூமை பயன்படுத்த சென்றபோது, பாத்ரூமில் உள்ள சுவற்றில் அட்டைப் பெட்டி ஒன்று இருப்பதை பார்த்து சந்தேகம் வந்துள்ளது.. பாத்ரூமில் எதற்காக அட்டைப்பெட்டியை வைக்க வேண்டும் என்று நினைத்து, அதை எடுத்து பார்த்தபோது தான், அதில் செல்போன் கேமரா வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.,..

செல்போன்

செல்போன்

அந்த செல்போன் ஆன் செய்யப்பட்டு வீடியோவும் ஓடிக் கொண்டிருந்துள்ளது.. இதனையடுத்து தன்னுடன் வந்த உறவினர்களோடு செல்போனை பறிமுதல் செய்து ஹோட்டல் நிர்வாகத்திடம் பாரதி முறையிட்டுள்ளார்... அத்துடன் இல்லாமல், உடனடியாக கிண்டி போலீசிலும் திமுக மகளிரணி நிர்வாகி பாரதி, புகார் தெரிவித்தார்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் கண்ணன் என்பவர் சிக்கினார்..

 ஊழியர் கண்ணன்

ஊழியர் கண்ணன்

இவர் அந்த ஓட்டலில் வேலை பார்க்கிறார்.. பாத்ரூமில் செல்போனை வைத்து, பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது கண்ணன்தான் என்பது தெரியவந்தது.. இதையடுத்து ஊழியர் கண்ணனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்... கண்ணனுக்கு இன்னொரு பெயர் தவக்கண்ணன் என்பதாகும்..

கும்பல்

கும்பல்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இந்த ஓட்டலுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறதாம்... கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர் போலீசார்.. இவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து இதுபோன்று பாத்ரூமில் பெண்களை வீடியோ படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி பாரதி, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்..

 செல்போன் ஆய்வு

செல்போன் ஆய்வு

இதையடுத்து, போலீசார், கண்ணனின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது போன்று எத்தனை நாட்களாக பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தார்? கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டது யார் யார் என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்... தொடர்ந்து பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்புகள் குறைந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

English summary
The Famous hotel Staff arrested for taking scandal video in women bathroom
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X