சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'கடவுள் இல்லைனு சொல்லலை..இருந்தா நல்லாயிருக்கும்''..இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் தொ.பரமசிவன்தானாம்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தசாவதாரம் படத்தில் பேசும் ''கடவுள் இல்லைனு சொல்லலை..இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்'' என்ற வாக்கியம் இன்று உயிரிழந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனுக்கு சொந்தமானதுதான்.

இதனை கமலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மனோன்மணியம் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ் துறைத் தலைவரும், பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் இன்று மரணம் அடைந்தார்.

The famous verse in the film Dasavathaaram belongs to tho.paramasivan

மனோன்மணியம் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ் துறைத் தலைவரும், பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் இன்று உயிரிழந்தார். தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் தொ.பரமசிவன் ஆவார்.

திருநெல்வேலியை சேர்ந்த இவர் தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர்.

தமிழக தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் தொ.பரமசிவன்: தினகரன் புகழஞ்சலிதமிழக தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் தொ.பரமசிவன்: தினகரன் புகழஞ்சலி

அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள தொ.பரமசிவன் நடிகர் கமல் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது.

அதாவது அடிக்கடி கமல் பேசும் மிகவும் பிரபலமான ''கடவுள் இல்லைனு சொல்லலை..இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்" என்ற வசனம் பேராசிரியர் தொ.பரமசிவனுக்கு சொந்தமானதுதான். ஆமாம்.. தொ.பரமசிவனின் இந்த வார்த்தையைத்தான் தசாவதாரம் படத்தில் கமல் பேசி இருப்பார்.

பெரியார் நினைவு நாளிலேயே தொ.ப.வும் மறைந்துவிட்டார்.. அதிர்ச்சி அளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் வேதனைபெரியார் நினைவு நாளிலேயே தொ.ப.வும் மறைந்துவிட்டார்.. அதிர்ச்சி அளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் வேதனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வாராவாரம் ஒவ்வொரு புத்தகத்தைக் குறிப்பிட்டு அதன் சிறப்புகளைக் கூறிவருகிறார். அந்த வகையில் நவம்பர் தொடக்கத்தில் அந்த நிகழ்ச்சியில் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' என்னும் நூலை பற்றி பேசினார்.
''கடவுள் இல்லைன்னு யார் சொன்னா... இருந்தா நல்லாயிருக்கும்" என்று தசாவாரத்தில் நான் பேசிய வசனத்தை ஒரு விவாதத்தில் போகிறபோக்கில் உதிர்த்தவர், இப்படி பல முத்துகளை உதிர்த்த ஐயா தொ.பரமசிவன் கோர்த்த முத்து மாலைதான் 'அழகர்கோயில்' என்று அந்த நிகழ்ச்சியில் கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor and politician Kamal Dasavatharam's phrase "I did not say no to God ... I said goodbye" belongs to the late cultural analyst D. Paramasivan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X