சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் ரத்து எதிரொலி... வேலூர் உட்பட 4 இடங்களுக்கு விடுமுறை ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் வேலூர் உட்பட நான்கு இடங்களில் அரசு பொதுவிடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகாரை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதே நேரம், ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The Government canceled the public holiday in four places, including Vellore

இந்தநிலையில், நாளை தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடியில் நாளை விடுமுறை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தின், மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது பணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது

இந்தநிலையில், வேலூரில், மே 19 ம் தேதி 4 தொகுதி இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

English summary
The Government canceled the public holiday in Vellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X