சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: குடிமராமத்து பணிகளுக்காக ரூ.499 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலம் முழுவதும் 39,200 ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், சுமார் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. மற்ற சில ஆயிரம் ஏரிகள் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1,511 ஏரிகளை புனரமைக்கும் பணி துவங்கியது.

The Government of Tamil Nadu has issued a blank announcement notice to divert people ..TTV dinakaran

இதில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஏரிகளை புனரமைக்கும் பணி முடிந்துள்ளதாக கூறப்பட்டது. எஞ்சியுள்ள 200 ஏரிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அடுத்த கட்ட பணிகளை துவக்கும் வகையில், பலவீனமான ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கண்டறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அடுத்த கட்டமாக 1,840 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான அறிவிப்பை தமிழக பொதுகப்பணித்துறை நேற்று வெளியிட்டது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், தமிழகம் முழுதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் மக்கள் தவியாய் தவிக்கின்றனர், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள், மக்களைத் திசை திருப்பவே இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதாக சாடியுள்ளார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியே என்ன ஆனது என்று தெரியாத நிலையில், பழனிச்சாமி அரசின் புதிய அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலையே என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றைத் தூர்வாரி பராமரிக்க கடந்த 2017-ல் ரூ.100 கோடியும், 2018-ல் ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த நிதியைக் கொண்டு குடிமராமத்துப் பணிகளை பெயரளவுக்குச் செய்துவிட்டு, வேலை முடிந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக மக்கள் பரவலாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்களின் குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஏரி, குளங்களிலும் இதே நிலைமைதான் இருந்தது. அப்படி என்றால் நீர் நிலைகள் உண்மையிலேயே பராமரிக்கப்பட்டனவா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது

எனவே கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமின்றி, புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள் நடைபெறவிருக்கின்றன என்ற பட்டியலையும் அரசு வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

English summary
The Tamil Nadu government has announced that Rs 499 crore has been allocated for immigration work and Amit Kumar General Secretary DTV Dinakaran has accused the people of deceiving people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X