சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1,099 கிரானைட் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும்... அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை:தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 1,099 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கனிம வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

உலகத் தரம் வாய்ந்த, கிரானைட் கற்கள், தமிழகத்தில் உள்ளன. மத்திய அரசின், சுற்றுச்சூழல் கொள்கை காரணமாக, கிரானைட் எடுக்கும் பணிகள், இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளன. தமிழக அரசும், இதற்கான கொள்கைகளை வகுக்காததால், இரண்டு லட்சம் தொழிலாளர்கள், வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

The Government of Tamil Nadu has taken measures to open 1,099 granite quarries, Says Minister C V Shanmugam

மீண்டும், கிரானைட் குவாரிகளை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் சண்முகம், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே தமிழகத்தில் இயங்கி வந்த கிராணைட் குவாரிகள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.

சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல் சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்

மேலும், குவாரிகளை இயக்க, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவிடம் அனுமதி பெற, வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைசசர் உத்தரவின்படி, அரசு புறம்போக்கு நிலத்தில், கிரானைட் எடுப்பதற்கு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

ஒரு மாதத்தில், மீண்டும் கிரானைட் குவாரிகளை திறப்பதற்கு, அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அனுமதியின்றி, கிரானைட் குவாரிகளை இயக்குவது சட்ட விரோதம் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.

English summary
Minister C V Shanmugam Said That The Government of Tamil Nadu has taken measures to open 1,099 granite quarries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X