சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் எஸ்விசேகர் பேச்சுக்கு பதிலடி அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக அரசு, யாருக்கும் அடிமை சேவகம் செய்யும் அரசாங்கம் கிடையாது என்று தெரிவித்தார்.

சட்டசபையில், இன்று காலை செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் ராஜு, பாண்டியராஜன், ஆகியார் துறைவாரியாக விவாதத்திற்கு பதில் அளித்து வருகிறார்கள்.

The Government of Tamil Nadu is not a slave to bjp govenment : says minister mafa panidiyarajan

முன்னதாக சட்டசபையில் விவாததிற்கு பங்கேற்பதற்கு முனபு மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு , பாண்டியராஜன், வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜனிடம், மத்திய அரசு சொல்வதை மாநிலஅரசு கேட்கவில்லை என்றால் ஆட்சி பறிபோகும் என்று நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்வி சேகர் பேசியிருக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாண்டியராஜன், தமிழக அரசு யாருக்கும் அடிமையாக இருந்து செயல்படும் அரசு கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்த பங்கமும் வராமல்

முன்னதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, மத்தியில் ஆளும் பாஜக அரசின் சொல்படி கேட்டு செயல்படுவதாகவும், மத்திய அரசின் ஊதுகுழலாக அதிமுக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்தன. இதற்கு சேர்த்து பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் பதில் அளித்துள்ளார்.

English summary
minister mafa panidiyarajan said that The Government of Tamil Nadu is not a slave to bjp govenment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X