சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி... தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு, உடனடியாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரை கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!சசிகலாவுக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரை கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

அசத்தல் அறிவிப்பு

அசத்தல் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க குற்றச்சாட்டு

தி.மு.க குற்றச்சாட்டு

ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துளளது தேர்தல் நோக்கம் கொண்டது என தெரிவித்த்துள்ளது. திமுக ஏற்கனவே ஆட்சிக்கு வந்தால் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த்துளளது. இதனையே தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வருக்கு நேரில் நன்றி

முதல்வருக்கு நேரில் நன்றி

இந்த நிலையில் இந்த அசத்தலான வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற விவசாய சங்க பிரதிநிதிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறினர்.

அரசாணை வெளியீடு

அரசாணை வெளியீடு

இந்த நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சபை விதி, 110ன் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில் , சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தை கருத்தில் வைத்து, நிலுவையில் உள்ள பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.

உடனடியாக செயல்படும்

உடனடியாக செயல்படும்

அதனை ஏற்று ''கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகளுக்குவழங்கப்பட்ட பயிர்க் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்,'' என அறிவித்தார். இன்று அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு, உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Government of Tamil Nadu today issued an order waiving crop loans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X