சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி.. நடந்த கண்ணதாசனே... உமை என்று இனி காண்போம்?

கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை இன்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்.. தமிழகத்துக்கே இந்த கவிமேதையால் நமக்கு பெருமை.. அதை நினைவுகூர்வதில் அதைவிட நமக்கு ஆனந்தம்!
கவிஞரை பற்றி என்ன சொல்வது? எதை எழுதுவது? அவரது வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்தான்.. ஒளிவுமறைவு இல்லாமல் வாழ்ந்த நபர். மனசில் எதையும் வைத்து கொண்டு பேசும் பழக்கம் இல்லாதவர்.

கவிஞரை பற்றின தகவல்களை நாம் படித்திருந்தாலும், அவர் குடும்பத்தினரே அவரை பற்றி சொல்லும்போது அந்த தகவல்கள் கூடுதல் பலமும், வலிமையும் பெறுகின்றன. அந்த வகையில் 2 தகவல்களை நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்:

தமிழகத்தில் ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு 2.70 லட்சமாக உயரும்.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வில் தகவல்தமிழகத்தில் ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு 2.70 லட்சமாக உயரும்.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வில் தகவல்

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. ரொம்ப பிசி. கைவசம் நிறைய படங்கள். ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது.

 செம தூக்கம்

செம தூக்கம்

பாண்டிச்சேரி வந்த முதல்நாள் முழுவதும் கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுவாம். இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை. மறுநாள் காலையும் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் எம்.எஸ்வி. டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் அறைக்கதவு முன்பு நின்று கொண்டு, யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்" என்று அங்கிருந்த படக்குழுவினரிடம் சத்தம் போட்டிருக்கிறார்.

எம்எஸ்வி

எம்எஸ்வி

டக்கென்று கண்ணதாசனின் ரூம் கதவு திறந்தது. எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள். எம்எஸ்வி பேசியது எப்படியோ கேட்காமல் இருந்திருக்காது என்று. கவிஞர் வெளியே வந்தார். எம்எஸ்வியிடம்... "சொன்னது நீதானா"... என்றார். எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். "ஐயோ..நான் இல்ல... அது வந்து.." என்று திணறினார். ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியை உற்றுபார்த்துவிட்டு "இல்லை... சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே" என்று சொல்லி, இதை கம்போஸ் செய், இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனாராம். இப்படித்தான் அந்த பாடல் பிறந்தது.

அதேபோல மற்றொரு சம்பவம்:

"ஓஹோவென்ற உச்சத்தில் கண்ணதாசனின் புகழ் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த சமயம் அது! அப்போது செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொள்ளவும் கண்ணதாசன் ஒப்புக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்.

குருகுலம்

குருகுலம்

இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தை தாண்டிதான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில்தான் கண்ணதாசன் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது. அவ்வளவு ஃபேமஸ்!

நடுரோடு

நடுரோடு

இந்த கிராமத்திற்குள் கண்ணதாசன் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் கண்ணதாசனை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது.

வாத்தியார்

வாத்தியார்

உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு கண்ணதாசன், "இல்லை.. நான் இங்க படிக்கும்போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்கு தெரியலையே..." என்றார். கவிஞர் ஏதோ விளையாட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்தாலும் இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை.

 ரேடியோவில் பாட்டு

ரேடியோவில் பாட்டு

திரும்ப திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டு கொண்டே இருந்தார். அந்த நேரம் பார்த்து எதிர்புறம் இருந்த ஒரு டீக்கடையில் பாட்டு சத்தம் கேட்டது. அது கண்ணதாசன் எழுதிய பாட்டுதான். உடனே கண்ணதாசன், "பாத்தீங்களா... என் பாட்டு ரேடியோவில் எல்லாம் வருது... அப்போ நான் உருப்பட்டேனே, இல்லையா? என் வாத்தியார் எப்படி என்னை அப்படி சொல்லலாம்?" என்றார்.

 ஆசிரியர்

ஆசிரியர்

கவிஞர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர்முழுக்க தெரிந்துவிட்டது. சிலர் ஓடிப்போய் கண்ணதாசனுக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் கண்ணதாசனை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்த கவிஞர், தூரத்தில் அவர் வருவதை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார்.

 என்ன முத்து?

என்ன முத்து?

வாத்தியார் கிட்ட வர வர... கண்ணதாசனுக்கு கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது.வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், கண்ணதாசனின் தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படி கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். கண்ணதாசனோ, "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார்.

போஸ்டர்கள்

அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைதானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னை தவிர வேறு யார் பேசமுடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத்தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சை கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்கு போ... நானும் உன் பேச்சை கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார்.

English summary
the great poet kannadhasans 93rd birthday today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X