சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை : வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ந்துள்ளது. தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறத

The heat air will continue to be in the northern districts, including Chennai, Weather Research Center

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை புளியரை,குண்டாறு, மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தும் அருவிகளில் அதிக நீர் விழவில்லை. இதனால், வார விடுமுறை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு

இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமான அனல் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வேலூர், திருவண்ணாமலை காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர் பெரம்பலூர் கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் கலவை பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்திற்கு மேற்கு திசை மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வரும் காற்றின் வேகம் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Weather Research Center report that The hot air will continue to be in the northern districts, including Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X