சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

Google Oneindia Tamil News

சென்னை:தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

பிரபல தொழிலதிபரும், பல கல்வி நிலையங்களின் அதிபர் ஐசரி கணேஷ். திரைப்படங்களில் தயாரித்த அவர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.o திரைப்படத்தில் நடித்திருந்தார்.

The Income tax department officials have been conducting raids in vels group of companies

அதுமட்டுமின்றி அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.அந்த படமும் வசூலை அள்ளியது.

இந் நிலையில், ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் நெருக்கத்தில் வேல்ஸ் குழுமத்திற்குச் சொந்தமாக பல்லாவரம், தாழம்பூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இது தவிர, தெலங்கானா மாநிலம் நிசாமாபாத், விகாரா பாத் ஆகிய இடங்களில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

ஒரே நேரத்தில் மொத்தம் 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் குழுவாக சென்று சோதனை நடத்தி உள்ளனர்.

சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள ஐசரி கணேஷ் வீடு, சேத்துப்பட்டுவில் உள்ள ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையின் போது ஆவணங்கள் கைப்பபற்றப்பட்டதாக தெரிகிறது.

அந்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையிலேயே பல பகுதிகளில் சோதனை நீடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தல் காலம் என்பதால் வருமானத்திற்கு ஏற்ப வரியை அரசுக்கு செலுத்தாத நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The Income Tax Department officials have been conducting raids in vels group of companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X