சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்

சேலம் 8 வழி சாலை மற்றும் நீட் பிரச்சனையில் பாஜக எடுத்து இருக்கும் நிலைப்பாடு பாமகவினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை நிச்சயம் வரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    சென்னை: சேலம் 8 வழி சாலை மற்றும் நீட் பிரச்சனையில் பாஜக எடுத்து இருக்கும் நிலைப்பாடு பாமகவினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் சிறிய குழப்பம் நீடித்து வருகிறது.

    சேலம் எட்டுவழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி பேசி இருந்தார். அதேபோல் நீட் தேர்வு கண்டிப்பாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டு இருக்கிறார்.

    நீட் மற்றும் சேலம் 8 வழி சாலை திட்டம் இரண்டிலும் தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுத்து இருக்கிறது. இது தற்போது பாஜக கூட்டணியில் உள்ள பாமகவினர் மத்தியில் பெரிய விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

    போட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை!போட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை!

    என்ன

    என்ன

    இந்த நிலையில் இந்த தொடர் கருத்து காரணமாக பாமக கடும் விரக்தியில் இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவின் மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டே நிதின் கட்கரி மேடையில் சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு ஆதரவாக பேசியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அன்புமணிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அன்புமணி கோபம்

    அன்புமணி கோபம்

    இதை அன்புமணியிடம் வெளிப்படையாக பாமக நிர்வாகிகள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிதின் கட்கரி அப்படி பேசி இருக்க கூடாது. தேர்தல் முடிந்த பின்பாவது இதை எல்லாம் பேசலாம். இப்போது ஏன் அவர் உறுதியாக இதை எல்லாம் வெளிப்படையாக கூறுகிறார் என்று அன்புமணியிடம் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கேட்டு இருக்கிறார்கள்.

    கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

    மக்களே கேட்டார்கள்

    மக்களே கேட்டார்கள்

    பாமக நிர்வாகிகள் மட்டுமில்லாமல், சேலம், தருமபுரி மக்களே கூட அன்புமணியிடம் இதுகுறித்து பிரச்சாரத்தின் போது கேட்டு இருக்கிறார்கள். சேலம் சாலைக்காக வழக்கு போட்டதில், பாமக கட்சியும் ஒன்று. அப்படி இருக்க அவர்களை வைத்துக் கொண்டே நிதின் கட்கரி இப்படி எல்லாம் பேசுவது சரியா என்பதுதான் பாமகவினர் மத்தியில் கேள்வியாக இருக்கிறது.

    நீட் தேர்வு

    நீட் தேர்வு

    அதேபோல் நீட் தேர்வை கடுமையாக பாமக எதிர்த்து வந்தது. அதை கோரிக்கையாக வைத்துத்தான் பாமக கூட்டணியே வைத்தது. ஆனால் கடைசியில் அதையும் கண்டிப்பாக கொண்டு வருவோம் என்று பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் கூறிவிட்டார். இதுவும் பாமகவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஏற்கனவே பிரச்சனை

    ஏற்கனவே பிரச்சனை

    அதிமுகவுடன் கூட்டணி வைத்தில் இருந்தே பாமகவில் இருந்து வரிசையாக தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள். முக்கிய தலைவர்கள் பலர் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள். இந்த நிலையில் தற்போது பாஜக தலைவர்களின் பேச்சு காரணமாக பாமகவில் மேலும் பிரச்சனை உருவாகி உள்ளது.

    பாமக என்ன செய்யும்

    பாமக என்ன செய்யும்

    இதனால் தற்போது பாமக தேர்தலுக்கு பின் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணிக்குள் இப்போதே இத்தனை குழப்பங்கள் நீடித்து வருகிறது. இப்படி இருக்கும் போது தேர்தலுக்கு பின் இந்த கூட்டணி எல்லாம் தொடருமா என்றும் பெரிய விவாதம் நடந்து வருகிறது. என்ன நடக்கும் என்பது மே 23க்கு பின்தான் தெரியும்.

    English summary
    The issue started in PMK - BJP alliance after the ruling Saffron party's stand-in Neet and GreenWay Project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X