சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் "இவருக்கும்தான்" போட்டியே.. பொட்டென்று டிவீட்!

சசிகலாவுக்கும் ரஜினிக்கும் இடையேதான் போட்டி என்று சொல்கிறார் சு.சாமி

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்துவிட்டார் சுப்பிரமணிய சுவாமி.. அதாவது தமிழகத்தில் ரஜினி- சசிகலா இடையேதான் போட்டி என்று புது தகவலை சொல்லி உள்ளார்.. இதனால் பாஜகவுக்குதான் குழப்பம் என்றும் தாறுமாறான கணிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினி அறிவிக்கவும், அது தொர்பாக பல தலைவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் கருத்து தெரிவித்துள்ளார்.

சு.சாமியை பொறுத்தவரை, இவர் பாஜகவை சேர்ந்தவர்.. அதேசமயம் பாஜகவை கடுப்பாக்கும் வகையில் சேம் சைட் கோல் போடவும் தவறாதவர்.

ரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே! ரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே!

விமர்சனம்

விமர்சனம்

ஆரம்பத்தில் ரஜினியை மிக கடுமையாக விமர்சித்தது சுப்பிரமணியன் சுவாமிதான்.. "பல வருஷமாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி கொண்டு இருப்பது நாடகம்.. ரஜினி ஒரு படிக்காத முட்டாள் என்பது முதல் அவன், இவன் என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியரும் இதே சாமிதான்.

 ஆபத்து

ஆபத்து

இதற்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார். ஒருகட்டத்தில் பாஜக ரஜினியை தவிர்க்க முடியாமல், பின்தொடர்ந்து கொண்டே இருக்கவும் சு.சாமியின் பேச்சும் சற்று மாறியது.. "இந்து மதத்திற்கு ரஜினிகாந்த் அரணாக இருப்பார் என்றால் அவருக்கு கட்டாயம் உதவிசெய்வேன்" என்று ஆதரவாக பேசினார்.

அபிப்பிராயம்

அபிப்பிராயம்

ரஜினி மீதான பார்வை சு.சாமிக்கு மாறி கொண்டே இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இவையெல்லாம்.. ஆனால், சசிகலா மீது அப்படி இல்லை.. அவர் மீது நல்ல அபிப்பிராயத்தை உறுதியாக வைத்திருப்பது சு.சாமிதான்.. "அதிமுகவில் ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது... அது சசிகலா அணி மட்டுமே" என்று சொல்லி அதிமுக, அமமுகவை சேர்த்து ஆச்சரியப்பட வைத்தவர்.

பூனைக்குட்டி

பூனைக்குட்டி

காரணம், அதிமுக மீதும் சு.சாமிக்கு எப்போதுமே நல்ல எண்ணம் இருந்ததில்லை.. "தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி, தலைநர் டில்லி சென்றால் வெறும் பூனைக்குட்டிதான்' என்று சொன்னவர்.. இப்போதுகூட சசிகலா மீதான நம்பிக்கை சு.சாமிக்கு அதிகமாகவே உள்ளது.. அதனால்தான் சிறையில் இருந்து இன்னும் அவர் வெளிவராத நிலையில், சசிகலாவுக்கும், ரஜினிக்கும் போட்டி என்கிறார். அதுமட்டுமல்ல, , இதனால் பாஜகவுக்கு குழப்பம் என்றும் சொல்கிறார். இதை ட்வீட்டாகவே அவர் பதிவிட்டுள்ளார்.

 அமமுகவா?

அமமுகவா?

இவர் சொல்வதை எப்படி பார்ப்பது? எப்படி அணுகுவது? சசிகலா வெளியே வந்தால்தான் தெரியும் அவர் அமமுகவா, அதிமுகவா என்று? ஒருவேளை அதிமுக அவர் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால், அதற்கு மாற்றாக ரஜினி இருப்பாரா? அப்படியென்றால் திமுகவுக்கு இங்கே கணக்கிலேயே இல்லையா? சசிகலா-ரஜினிக்கு போட்டி என்றால், பாஜக எப்படி குழப்பமாகும்? என்று தெரியவில்லை.

 பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

இப்போதுகூட சாமி பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறாரா? எதிராக பேசுகிறாரா என்று புரியவில்லை.. ஆனால், இன்னும் ரிலீஸ் ஆகாத சசிகலாவை வைத்தும், கட்சியே ஆரம்பிக்காத ரஜினியை வைத்தும் இப்போதே சிண்டு முடிந்து பேசுவது வியப்பை தந்து வருகிறது. ஆனால் சாமியை சும்மா எடுத்துக் கொள்ளமுடியாது.. பல அரசியல் குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமைக்குரியவர் இவர். எனவே சசிகலாவையும், ரஜினியையும் வைத்து இவர் பேசியிருப்பதில் என்ன உள்ளடி வேலைகள் மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

English summary
The key battle will be probably between Rajnikanth and Sasikala, says Subramanian Swamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X