சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2016ல் தமிழ்நாட்டையே உலுக்கிய "சம்பவம்".. பிஎஃப் தடைக்கு முக்கிய காரணம்! மத்திய அரசு சொன்ன பாயிண்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கான முக்கியமான காரணங்களையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் தடை விதிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் மொத்தமாக அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்.. பிஎஃப்ஐ மற்றும் துணை அமைப்புகள் மீதான தடையால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு உச்சக்கட்ட பதற்றம்.. பிஎஃப்ஐ மற்றும் துணை அமைப்புகள் மீதான தடையால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த அமைப்பினர் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. கேரளாவில் நடைபெற்ற சஜித் என்ற இந்து அமைப்பின் நிர்வாகி கொலைக்கு இந்த அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. 2021ல் சஜித் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நந்து என்று நபர் 2021ல் கேரளாவில் கொலை செய்யப்பட்டார். அவரும் இந்த அமைப்பு மூலம் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. கேரளாவில்தான் இந்த அமைப்பு மூலம் பெரும்பாலான கொலைகள் நடைபெற்று உள்ளன.

தொடர் சம்பவங்கள்

தொடர் சம்பவங்கள்

2018ல் இந்து அமைப்பு ஒன்றின் நிர்வாகி அபிமன்யு என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரின் மரணத்திற்கும் இந்த அமைப்பே காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. 2017 பிபின் என்ற நபர் கேரளாவில் கொலை செய்யப்பட்டார். அதற்கும் இதே அமைப்புதான் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை திட்டமிட்டு அந்த அமைப்பு கொலை செய்ததாக கூறப்பட்டு உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

அதேபோல் கர்நாடகாவில் 2017ல் சரத் என்பவர் கொலையை இந்த அமைப்புதான் செய்தது. கரண்டகவில் 2016ல் ருத்ரேஷ் என்பவர் கொலையை இந்த அமைப்புதான் செய்தது. பிரவீன் பூஜாரி என்பவர் கர்நாடகாவில் 2016ல் கொலை செய்யப்பட இந்த அமைப்புதான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. இது போக தமிழ்நாட்டிலும் இரண்டு கொலைகளை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

என்ன அமைப்பு?

என்ன அமைப்பு?

2016ம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி சசி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல் 2019ம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார். திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை இவர் கடுமையாக எதிர்த்து வந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் 2016ல் இவரை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்தது. இவரை வெட்டி படுகொலை செய்த கும்பல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாதான் என்று கூறப்படுகிறது.

எங்கே நடந்தது?

எங்கே நடந்தது?

திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் இவர் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மத மாற்றத்திற்கு எதிராக பாமக நிர்வாகி ராமலிங்கம் பேசி இருக்கிறார். இதில் அந்த பகுதி இஸ்லாமியர்களுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சண்டையாக மாறி உள்ளது. இந்த நிலையில் இரவு பணி முடித்து செல்லும் போது பாமக நிர்வாகி ராமலிங்கம் திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் கொல்லப்பட்டார். இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்வதாக மத்திய அரசு கூறி உள்ளது.

English summary
The lists and reasons told by the Union government for banning Popluar Front of India .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X